தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | பிரசாத் ஸ்டுடியோவால் மன உளைச்சல் : விருதுகளை திருப்பி தர இளையராஜா முடிவு | மீனா விடுத்த சவால் | தனுஷ் படத்தில் உஷாரான கார்த்திக் நரேன் |
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு புதரில் வீசப்பட்டாள். இந்த சம்பவம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. இதுகுறித்து நடிகைகளும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அது வருமாறு:
ராதிகா சரத்குமார்:
அந்த சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி படிக்கும்போதே என் இதயம் நொறுங்குகிறது. கண்களில் கண்ணீர் சிந்தாமல் அதைப் பற்றி எழுதக்கூட வலிமை இல்லை, குற்றவாளிகளை விடக்கூடாது.
ஐஸ்வர்யா தத்தா:
என்ன ஒரு வெட்கக்கேடான முட்டாள்தனம். 7 வயது பெண் குழந்தையை எப்படி பாலியல் பலாத்காரம் செய்ய முடியும்.. இதற்கு ஒரே ஒரு தண்டனை உடனே தூக்கிலிட வேண்டும். என் இதயம் நொறுங்கிவிட்டது. கடவுள் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு அதிக பலத்தை அளிக்கட்டும்.
அதுல்யா ரவி
தமிழகத்தில் இதயத்தை வலிக்கச் செய்யும் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்கிறவர்கள் மாற மாட்டார்கள். கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும்.
சாக்ஷி அகர்வால்:
இதயத்தில் ரத்தம் கசிகிறது. எப்படி சிலர் மனித தன்மையே இல்லாமல் இருக்கிறார்கள். சிறுமி கொலைக்கு நீதி வேண்டும்.