Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் வாழ்க்கையைத்தான் அஜித்துக்கு பாட்டாக எழுதினார்கள் ; பாலா

03 ஜூலை, 2020 - 13:34 IST
எழுத்தின் அளவு:
My-life-become-song-to-Ajith-movie-says-actor-bala

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் தான் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு பாடகியான அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். அம்ருதா சுரேஷ் ஐடியா ஸ்டார் சிங்கர் மூலம் பிரபலமானவர். இவர்களுக்கு அவந்திகா என்கிற ஏழு வயது பெண் குழந்தையும் உண்டு. கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2016-ல் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களது மகள், அம்மாவுடன் தான் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறி இருந்தது.

இந்தநிலையில் தற்போது தான் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் மகளை பிரிந்து இருப்பதன் வலியை குறித்தும் 'விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே என்கிற பாடல் தன்னை, தன்னுடைய வாழக்கையை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட பாடல் தான் என்றும் கூறியுள்ளார் பாலா.

இதுகுறித்து அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, “என் குழந்தையை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பது எனக்குத்தான் தெரியும்.. என் அண்ணன் சிவா இயக்கிய விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கும் அவரது மகளுக்குமான பாசத்தை வெளிப்படுத்தும் கண்ணான கண்ணே பாடல் முழுவதும் என் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்டது தான்.. இதை அஜித்தும் நன்கு அறிவார். இந்தப்படம் வெளியான பின்பு என்னுடன் அரைமணி நேரம் போனில் பேசிய அஜித் இந்தப்பாடலில் நடித்த சமயத்தில் எல்லாம் எனக்கு உன் நினைவுதான் வந்தது.. நீ ஏன் இப்படி இருக்கிறாய்.. நீ திரும்பி வரவேண்டும் என என்னை அன்புடன் கேட்டுக்கொண்டார்” என கூறியுள்ளார் பாலா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'தாதா 87 - 2.0' - ஆரம்பமே சர்ச்சை'தாதா 87 - 2.0' - ஆரம்பமே சர்ச்சை விஷாலுக்கு வில்லியாக மாறிய ரெஜினா விஷாலுக்கு வில்லியாக மாறிய ரெஜினா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Endrum Indian - Kolkata,இந்தியா
04 ஜூலை, 2020 - 17:51 Report Abuse
Endrum Indian கல்யாணம் பண்ணுவார்களாம் விவாகரத்து பண்ணுவார்களாம் குழந்தை பிரிவினால் துன்பம் அடைவார்களாம்????இப்படி எதுக்கெடுத்ததாலும் டப்பா அடித்து விளம்பரம் பண்ணுவதே இவர்கள் 24 மணி நேர நோக்கமாக இருக்கின்றது இப்படி விளம்பரம் இல்லையென்றால் இவர்கள் பெயர் மீடியாவில் நீண்ட நாட்கள் வரவில்லையென்றால் அடுத்தது தற்கொலை தான் இவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே ஆய்தம் . எவ்வளவு கேவலமான வாழ்க்கை நெறிமுறை இவர்கள் வாழ்கின்றார்கள்???இதை ஆகா ஓகோ செய்ய இவர்களுக்கு ரசிகர்கள் அதாவது மூளை மழுங்கிய வெறியர்கள் டாஸ்மாக் நாடே விழித்தெழு, விவேகம் அறி, நல் வழி காண், இல்லையெனில் நாசம் தான் உன் வாழ்க்கை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in