ரோஜா சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் | மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சசிகுமார் | நான் உங்கள் ரசிகன் : வில்லன் நடிகரை குஷிப்படுத்திய விஜய் | ‛தாமி' படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி சுவிதா | வெப்சீரிஸ் இயக்கும் அருண்ராஜா காமராஜ் | வித்யாபாலனை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பிரதீப் சர்க்கார் காலமானார் | இரண்டிரண்டு நாயகர்ளுடன் பத்து தல Vs விடுதலை | திருமணத்திற்குப் பிறகு கிளாமர் நடனத்தில் சாயிஷா | படப்பிடிப்பில் அக்ஷய் குமாருக்கு விபத்து : அதிர்ச்சியில் ரசிகர்கள் | நல்ல படங்கள் இல்லை, தடுமாறும் தியேட்டர்கள், பல காட்சிகள் ரத்து |
விஜய்ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் 'தாதா 87'. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக 'தாதா 87 2.0' என்ற படத்தை உருவாக்கி வருவதாக தற்போது தெரிவித்துள்ளார்கள்.
முதல் பாகத்தில் வயதான தாதாவாக நடித்திருந்தார் சாருஹாசன். இந்த இரண்டாவது பாகத்திலும் படத்தின் தலைப்புக்கேற்ப தாதாவாகத்தான் நடிப்பார். ஆனால், அதற்காக அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் சாருஹாசன், சிவசேனா கட்சியின் நிறுவனர் மறைந்த பால் தாக்கரே தோற்றத்தில் உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது படங்களைப் பற்றி சர்ச்சை எழுந்து அதன் மூலம் இலவச விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி சில விஷயங்களை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த விவகாரம் சீக்கிரமே ஒரு சர்ச்சையாக எழும், அதன்பின் சில பல விளக்கங்கள் வரும், படத்திற்கு அதனால் இலவச பப்ளிசிட்டி கிடைக்கும்.