சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
பராகான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் என பாலிவுட்டில் அடுத்தடுத்து இறந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் இன்று(ஜூலை 3) காலமானார்.
கடந்த 40 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடன இயக்குநராக இருப்பவர் சரோஜ் கான். 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். இதில் ஒரு விருது, தமிழில் அதிதிராவ் நடித்த சிருங்காரம் என்ற படத்திற்காக கிடைத்தது. குறிப்பாக மாதுரி தீட்சித், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஆகியோரின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குநராக இவர் தான்.
சரோஜ்கானுக்கு சில தினங்களுக்கு முன்பு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையின் பாந்த்ராவில் இருக்கும் குருநானக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்தது. இருப்பினும் சுவாசக்கோளாறு பிரச்னைக்காக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
சரோஜ் கானுக்கு ராஜு கான் என்ற மகனும், சுகைனா கான் என்ற மகளும் உள்ளனர். கொரோனாவால் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அஞ்சலி செலுத்திவிட்டு காலையிலேயே மும்பை புறநகர் மாலட் பகுதியில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
அம்மாவின் மறைவுக்கு மூன்றுநாட்கள் இரங்கல் கூட்டம் நடக்கும் என சரோஜ்கானின் மகள் சுகைனா கான் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சரோஜ்கானின் மறைவுக்கு பாலிவுட்டின் பல பிரபலங்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.