Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து ஹீரோயினாகும் மற்றொரு செய்தி வாசிப்பாளர்

02 ஜூலை, 2020 - 17:14 IST
எழுத்தின் அளவு:
Divya-Duraisamy-to-act-as-heroine

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று பிரபலம் ஆனவர்கள் ஏராளம். சிவகார்த்திக்கேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர், வாணி போஜன் என இந்தப் பட்டியல் நீளமானது. தற்போது இந்தப் பட்டியலில் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியும் இணைந்துள்ளார்.

இளம் செய்திவாளிப்பாளரான இவர் சமூகவலைதளப் பக்கத்தில் தொடர்ந்து தனது விதவிதமான புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து வருவதால், ஏற்கனவே ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். இதனாலேயே அவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.

ஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் மகாபா ஆனந்துக்கு ஜோடியாக சிறிய கதாபாத்திரத்தில் திவ்யா நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் சிறிய ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஜெய் மற்றும் பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு முடிவடைந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஊரடங்கில் புதிய தொழில் தொடங்கிய வரலட்சுமி சரத்குமார்ஊரடங்கில் புதிய தொழில் தொடங்கிய ... சமந்தாவின் பெல்ட் ரூ. 70 ஆயிரம், ஹேண்ட் பேக் ரூ. 3 லட்சம் சமந்தாவின் பெல்ட் ரூ. 70 ஆயிரம், ஹேண்ட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

04 ஜூலை, 2020 - 08:34 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் சரியா போனியாகலைன்னா இருக்கவே இருக்கு மீ டூ
Rate this:
maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
03 ஜூலை, 2020 - 07:53 Report Abuse
maruthu pandi தெருவோர காய்ந்த இலை சருகை கோபுரத்தின் உச்சிக்கு தூக்கிச்செல்லும் சினிமா என்பது உண்மை. அந்த நடிகர் என்ன அதனை பெரியஆளா ? அவருடன் நடிப்பது பெரிய விஷயம் என குறிப்பிட ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in