நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை:நேரம் காலம் பாராமல், தன்னுயிர் பற்றி கவலைப்படாமல், சிறப்பான பணியை முன்வைக்கும், முதல்வர் மற்றும் அதிகாரிகளை, நன்றியோடு பார்க்கும் அதேவேளையில், அரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈன காரியங்களை, சில அதிகாரிகள், தங்கள் வரம்பு மீறி செய்து விடுகின்றனர்.நல்ல போலீசார் மத்தியில், அப்பாவி மக்களை வேட்டையாடும் சில ஓநாய்களும் கலந்து, ஒட்டுமொத்த காவல் துறையையே, பழிச் சொல்லுக்கு ஆளாக்கி விடுகின்றனர்.தனிப்பட்ட சில மனிதர்களின் தவறு, ஒரு அரசின் தவறல்ல. அது, அரசோ, காவல் துறை சார்ந்த உயரதிகாரிகளோ எடுத்த முடிவல்ல என்பதை, மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில், அரசின் நடவடிக்கைகள், வெளிப்படையாக அமைய வேண்டும்.அதுவே, வரும் காலங்களில், மக்களின் மனதில் நல்லதொரு பிம்பத்தை ஏற்படுத்தி தரும். குற்றம் செய்தவர்களை பாரபட்சமின்றி, இந்த அரசு கையாள வேண்டும் என்பதை, ஒரு மூத்த குடிமகனாக கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.