Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பூர்ணா விவகாரத்தில் என்னை இழுப்பது ஏன் : நடிகர் டினி டாம் ஆவேசம்

01 ஜூலை, 2020 - 17:22 IST
எழுத்தின் அளவு:
Dont-involve-me-in-poorna-case-says-Tini-Tom

நடிகை பூர்ணா திருமண மோசடி கும்பலால் ஏமாற்றப்பட இருந்து தப்பித்ததும், பின்னர் போலீஸில் புகார் அளித்து தற்போது அந்த கும்பலை சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதும் கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது... இந்த மோசடி கும்பலுடன் தொடர்புள்ளதா என மலையாள காமெடி நடிகர் தர்மஜன் போல்காட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்..

இந்தநிலையில் மலையாள குணச்சித்திர மற்றும் காமெடி நடிகரான டினி டாம் என்பவருக்கு இதில் தொடர்பிருக்கலாம் என ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து நடிகர் டினி டாம் அவர்களது செயலை கண்டித்தும், உண்மை என்ன என்றும் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

“நான் பலமுறை சைபர் க்ரைம் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறேன்.. என்மீது தவறில்லாவிட்டாலும் நான் கூறிய வார்த்தைகளை, எனது செயல்களை தவறாக புரிந்துகொண்டு என் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக அவற்றை நான் நினைத்துக்கொள்வேன்.. ஆனால் நடிகை பூர்ணா விவகாரத்தில் அவரோ, அல்லது குற்றம் சாட்டப்பட்டு கைதாகி உள்ள நபர்களோ என் மீது எந்த குற்றமும் சுமத்தாத நிலையில் ஒரு இணையதள செய்தி சேனல் இந்த மோசடிக்கும்பலுடன் எனக்கும் தொடர்பு உள்ளது போன்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இது என் மீது வீணாக களங்கம் சுமத்துவது போல இருக்கிறது. என் குடும்பத்தினர் இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சேனல் ஓரிருமுறை எனது பேட்டிகளுக்காக கேட்டபோது என்னால் அவர்களுக்கு நேரம் ஒதுக்கி பேட்டி தர முடியவில்லை.. அதை மனதில் வைத்துக்கொண்டு என் மீது என்னை இந்த விவகாரத்தில் கோர்த்துவிட நினைக்கின்றனர்.. நான் கஷ்டப்பட்டு சினிமாவில் ஓரளவு முன்னேறியவன்.. அதேசமயம் மிகப்பெரிய நடிகன் ஒன்றும் அல்ல.. இன்று என்னிடம் இருக்கும் கார், வீடு போன்றவை நான் உழைத்தும், லோன் போட்டு வாங்கியவை.. சச்சின் டெண்டுல்கர் சொன்னதை வேதவாக்காக கொண்டு முன்னேறுவதற்காக குறுக்கு வழியில் செல்லக்கூடாது என்பதை லட்சியமாக கொண்டு நடப்பவன் நான். என்மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கத்தான் போகிறேன்” என கூறியுள்ளார் டினி டாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவால் சமாதானமான ஹீரோவும் தயாரிப்பாளரும்கொரோனாவால் சமாதானமான ஹீரோவும் ... தெலுங்கு நடிகர், தயாரிப்பாளர் பந்தளா கணேஷ் கொரோனாவில் இருந்து மீண்டார் தெலுங்கு நடிகர், தயாரிப்பாளர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in