Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கொரோனாவால் சமாதானமான ஹீரோவும் தயாரிப்பாளரும்

01 ஜூலை, 2020 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Shane-Nigam-compramise-with-producer

கொரோனா தாக்கமும் அதை தொடர்ந்த ஊரடங்கும் பலருக்கும் சில யதார்த்தங்களை புரிய வைத்துள்ளதுடன் சிலரது கருத்து வேறுபாடுகளையும் களைந்து அவர்களை ஒன்றிணைத்துள்ளது. அப்படித்தான் கீரியும் பாம்புமாக இருந்த மலையாள தயாரிப்பாளர் ஷோபி ஜார்ஜும் இளம் ஹீரோ ஷேன் நிகமும் தங்கள் உரசல்களை மறந்து கைகோர்த்துள்ளனர்.. இதனால் பாதியில் நின்ற இவர்களது படத்தின் படப்பிடிப்பும் நேற்றுடன் சுமூகமாக முடிவடைந்துள்ளது.

மலையாள திரையுலகில், வளர்ந்து வரும் இளம் நடிகர் தான் ஷேன் நிகம் என்பவர். இவர், தான் நடித்து வந்த வெயில் என்கிற படத்தில் கூடுதலாக சம்பளம் கேட்டு அவர்கள் தர மறுத்ததால், படத்தில் தான் நடித்து வந்த தலைமுடி கெட்டப்பை மாற்றி, முக்கால்வாசி மொட்டையடித்து தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என மாறிமாறி பஞ்சாயத்து நடந்தது. அவர்மீது ரெட்கார்டு போடப்பட்டதால் தமிழில் சீனுராமசாமி படம், விக்ரமின் கோப்ரா ஆகிய பட வாய்ப்புகளையும் கூட ஷேன் நிகம் இழந்தார்.. ஒருவழியாக வெயில் படத்தை முடித்துக்கொடுக்க சொல்லி பஞ்சாயத்தை முடித்தனர்.

ஆனால் மீண்டும் அந்தப்படத்திற்காக உடனே எப்படி முடி வளர்த்து நடிக்க முடியும் என்கிற இக்கட்டான நிலையில் தான் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடந்த ஷேன் நிகமுக்கு வெயில் பட கெட்டப்புக்கு ஏற்றபடி முடி வளர ஆரம்பித்தது.. சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பை துவங்கிய வெயில் படக்குழுவினர் நேற்றுடன் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டனர். ஹீரோவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட தயாரிப்பாளர் ஷோபி ஜார்ஜ் இந்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் சந்தோஷமாக பகிர்ந்துகொண்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஊரடங்கு முடிந்ததும் மம்முட்டியின் சிபிஐ-5ஆம் பாகம் துவக்கம்ஊரடங்கு முடிந்ததும் மம்முட்டியின் ... பூர்ணா விவகாரத்தில் என்னை இழுப்பது ஏன் : நடிகர் டினி டாம் ஆவேசம் பூர்ணா விவகாரத்தில் என்னை இழுப்பது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in