Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்விழா படங்கள்: ராமன் எத்தனை ராமனடி

01 ஜூலை, 2020 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Raman-Ethanai-Ramanadi

சிவாஜி கணேசன், சத்ரபதி சிவாஜியாக நடித்த ஒரே படம் ராமன் எத்தனை ராமனடி. விழுப்புரம் சின்னையா கணேசன் வீர மராட்டிய மன்னர், சத்ரபதி சிவாஜியாக நாடகத்தில் நடித்து புகழ்பெற்றதால், சிவாஜி கணேசன் ஆனார். நாடகத்தில் சிவாஜியாக நடித்த வி.சி.கணேசன் சினிமாவிலும் அந்த கேரக்டரில் நடிக்க விரும்பினார். ஆனால் இறுதிவரை அந்த ஆசை நிறைவேறவில்லை.

அவர் நடித்த ராமன் எத்தனை ராமனடி படத்தில் வரும் ஒரு நாடக காட்சியில் மராட்டி மன்னர் சத்ரபதி சிவாஜியாக அவர் நடித்தார். இது ஒரு ஓரங்க நாடகம். பல போர்களில் வென்று இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சிவாஜியை அவர் தாழ்ந்த குலத்தவர் என்று கூறி அவர் மன்னராக முடிசூட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தளபதி ஒருவர் வந்து கூறுவார். அதற்கு சிவாஜி தன் சாதனைகளை சொல்வதாக இந்த காட்சி அமைந்திருக்கும். சுமார் 5 நிமிடம் இடம்பெறும் இந்த காட்சியில் சிவாஜி தன் வாழ்க்கை சரித்திரத்தை அடுக்கு மொழி வசனத்தில் கோபம் கொப்பளிக்க சொல்வார்.

ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிவாஜியுடன் கே.ஆர்.விஜயா, ஆர்.முத்துராமன், எம்.என்.நம்பியார், பானுமதி உள்பட பலர் நடித்திருந்தார்கள். பி.மாதவன் தயாரித்து இயக்கி இருந்தார். எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார்.

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு..., சித்ரை மாதம் பவுர்ணமி நேரம்..., நிலவு வந்தததும் மலர் மலர்ந்ததா உள்ளிட்ட தேனினும் இனிய பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்த படம் பல வருடங்களுக்கு பிறகு ராம் தேரா கிட்னே நாம் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆனது. பி.மாதவனே இயக்கி தயாரித்தார். சஞ்சீவ் குமார், ரேகா நடித்தனர். இரு மொழிகளிலும் வெற்றி பெற்ற படம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஷகீலாவாக நடிக்கும் சரயு மோகன்ஷகீலாவாக நடிக்கும் சரயு மோகன் ஆட்டோ மீட்டரை போல மின் கட்டணம் : சந்தீப் கிஷன் கிண்டல் ஆட்டோ மீட்டரை போல மின் கட்டணம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ravi - Danbury,யூ.எஸ்.ஏ
02 ஜூலை, 2020 - 17:21 Report Abuse
Ravi அஞ்சலி தேவி தயாரித்து நாகேஸ்வர ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பக்த துக்காராம் படத்தில் நம் சிவாஜிகணேசன் மராட்டிய சத்திரபதி சிவாஜி மன்னராக கலரில் நடித்திருப்பார் - கலரில் சிவாஜி வெகு அருமையாக இருக்கும். ஒன்லைன் பிரீயாக படத்தை பார்க்கலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in