Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னைக்கு காரில் மது கடத்தல்: சினிமா தயாரிப்பாளர் கைது

01 ஜூலை, 2020 - 13:33 IST
எழுத்தின் அளவு:
Producer-arrested-for-liquior-in-car

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே இந்த பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் மது அருந்த முடியாமல் தவிக்கும் பலர், திருட்டுத்தனமாக வெளிமாவட்டங்களுக்கு சென்று மது அருந்துவதும், மதுபாட்டில்களை வாங்கி தங்கள் வாகனங்களில் சென்னைக்கு கடத்தி வரும் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மதுரவாயல் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்று வந்தது. அதில் இருந்தவர்களை பார்த்து சந்தேகமடைந்த போலீசார், காரை சோதனையிட்டனர். அப்போது அதில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைச்செல்வன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சாருஹாசன் நடித்த தாதா 87 படத்தை தயாரித்துள்ளார். மற்றொருவர் பல்மருத்துவர் ஆனந்த்ராஜ் ஆவார். இருவரும் மீது மது கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இணையதளங்களுக்கு செல்லத் தயாராகும் தமிழ் சினிமாஇணையதளங்களுக்கு செல்லத் தயாராகும் ... ஷகீலாவாக நடிக்கும் சரயு மோகன் ஷகீலாவாக நடிக்கும் சரயு மோகன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03 ஜூலை, 2020 - 09:26 Report Abuse
skv srinivasankrishnaveni துன்ன சோற்றுக்கே தவிக்கும்பலை ஏழைகளோ இந்த நாசமாப்போன மதுக்கு அடிமை தமிழ்நாடே ப்ளீஸ் மீண்டும் எப்போது நீ மது இல்லா மாநிலமா ஆவப்போரே கோயில் சொத்துக்களையும் கொள்ளை அடிச்சுட்டானுக
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in