Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வீழ்வேன் என்று காத்திருக்கும் கூட்டம்: சமூகவலைதளங்கள் மீது சரத்குமார் பாய்ச்சல்

01 ஜூலை, 2020 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Sarathkumar-slams-social-medias

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் பற்றி கடந்த சில நாட்களாக அவர் தனது கட்சியை கலைக்க போவதாகவும், இன்னொரு கட்சியில் சேரப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது. அதோடு சாத்தான்குளம் சம்பவத்தை ஜாதி ரீதியாக அணுகுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து சரத்குமார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் கணிதம் பயின்று விட்டு சைக்கிளில் சென்று பத்திரிகை விநியோகம் செய்கின்ற இளைஞனாக வாழ்க்கையை துவங்கி சைக்கிள் பழுது பார்ப்பவனாக, பத்திரிகை நிருபராக, பயண நிறுவனம் நடத்துபவனாக, திரைப்பட தயாரிப்பாளராக. நடிகராக, சமூக சேவகனாக, பிறர் நலம் விரும்பியாக, அரசியல்வாதியாக பயணித்த அனுபவத்தில் எழுதுகிறேன்

தரமான, நேர்மையான, பத்திரிகை, தொலைக்காட்சிகள் இணையதளம் நடுவே ஒரு சில இணைய செய்திகள் தருகின்ற சகோதரர்களுக்கு....
தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகளை காட்டு தீ போல் பரப்புவதில் நீங்கள் அடையும் மகிழ்ச்சி, உங்கள் பதிவுகளால் பலருக்கு ஏற்படும் வேதனை அவர்கள் அடையும் துயரங் களில் நீங்கள் அடையும் மகிழ்ச்சி பலரிடம் நம் பதிவு சென்றடைந்து விட்டது, நினைத்ததை சாதித்து விட்டோம், ரேட்டிங் உயர்ந்துவிட்டது, வசூல், லாபம் என்ற மகிழ்ச்சியில் உங்களுக்கெல்லாம் உணர்வே கிடையாதா? மனசாட்சி என்பதை இறக்கி வைத்து விட்டீர்களா?

பேனா முனையின் வலிமையை எதற்கு பயன்படுத்த வேண்டும், உங்கள் அறிவை ஆக்க சக்தியாக மாற்ற வேண்டும் என்ற உணர்வு உங்களைப் போன்றவர்களுக்கு கிடையாதா? உங்களைப்போல பதிவிட்ட செய்தி உண்மையா? இல்லையா? என தெரிந்து கொள்ளாமல் சோசியல் மீடியா என்ற சக்திமிக்க ஆயுதத்தை பயன்படுத்தி மஞ்சள் பத்திரிக்கைக்கு சவாலாக நீங்களும் நீங்களெல்லாம் இருப்பதில் வேதனை அடைகிறேன், வெட்கப்படுகின்றேன்.

நான் என் குடும்பம், என் வாழ்க்கைப் பயணம், உங்களைப் போன்றவர்களுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஒருவன் என்று வீழ்வான் என்று காத்துக் கொண்டிருக்கும் கூட்டமாயிற்றே நீங்கள். உழைத்து வாழ்கிறவனின் ஏற்றம் வேதனைதான் தரும்.

என் வாழ்க்கையின் சோகங்களை, வேதனைகளை, தாய் தந்தையரின் இழப்பு, சகோதரர் இழப்பு, பொருளாதாரப் பின்னடைவு, தோல்விகள், அவதூறுகள், இவைகளெல்லாம் தாங்கி வாழ்க்கை என்பது வாழ்வதற்கு, வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். அதிலும் நியாயத்துக்கும் தர்மத்துக்கும் கட்டுப் பட்டு பிறர் வீழ்ச்சியில் அல்ல என் முயற்சியில் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.

என் பயணத்தின் எல்லை, இலக்கு, இவைகளை நன்கு அறிந்தவன் நான். விடாமுயற்சி தடைகற்களை உடைத்தெறியும் வலிமை, என் தமிழ் உறவுகளின் ஆதரவு, என்னை வெற்றி பெறச் செய்யும். பிறர் நலனுக்காக நம் மக்களுக்காக தவறான பதிவுகளுக்கும் செய்திகளுக்கும் மறுப்பு தெரிவித்தால் அதையும் செய்தியாக்கி பொருளாதார உயர்வு பெற விரும்பும் உங்களுக்கெல்லாம் அந்த மகிழ்ச்சியையும் நான் தர விரும்பவில்லை.

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சத்தியமா விடவே கூடாது - ரஜினி ஆத்திரம்சத்தியமா விடவே கூடாது - ரஜினி ... இணையதளங்களுக்கு செல்லத் தயாராகும் தமிழ் சினிமா இணையதளங்களுக்கு செல்லத் தயாராகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Bhaskaran - Chennai,இந்தியா
03 ஜூலை, 2020 - 15:57 Report Abuse
Bhaskaran ஊடகங்கள் என்னும் போர்வையில் தரகர்கள் நிறைய உள்ளார்கள்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03 ஜூலை, 2020 - 10:59 Report Abuse
skv srinivasankrishnaveni ஆமாங்க நீங்க சொல்றது 1000000000000%கரீக்கடுங்கோ சினி பீல்டுலே கேக்கவே வேண்டாம் காலைவாரவே காத்திருக்கும் கேன கிறுக்காண்டிக்கூட்டங்கள் .
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
02 ஜூலை, 2020 - 16:36 Report Abuse
பெரிய ராசு நீ எந்திரிச்சா உளுந்தா எங்களுக்கு என்ன
Rate this:
02 ஜூலை, 2020 - 15:43 Report Abuse
Murphys Law Sarath is right, how can people expect him to fall again and again.
Rate this:
man -  ( Posted via: Dinamalar Android App )
02 ஜூலை, 2020 - 09:46 Report Abuse
man NEENGA ENTHA KATCHI PONALUM UNGALUKKU DEPOSIT HA KEDAIKATHU 😂😂😂
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in