Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சத்தியமா விடவே கூடாது - ரஜினி ஆத்திரம்

01 ஜூலை, 2020 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Rajini-angry-statement-of-Sathankulam-issue

சாத்தான்குளத்தில் போலீஸ் காவல் நிலையத்தில் இருந்த தந்தை, மகன் இருவரும் போலீசார் அடித்து துன்புறுத்தப்பட்டதில் மரணம் அடைந்தனர். இது பெரும் சர்ச்சையாகி உள்ள நிலையில் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளங்களில் ஒருவாரமாக பலியான ஜெயராஜ், பெனிக்ஸிற்கு நீதி வேண்டும் என டிரண்டாகி வருகிறது.

அரசியல் ஆர்வத்தில் இருக்கும் ரஜினி இதுதொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஜெயராஜ்-பெனிக்ஸ் குடும்பத்தாரிடம் ரஜினி போனில் பேசியதாக அவரின் மக்கள் தொடர்பாளர் கூறியிருந்தார். இந்நிலையில் முதன்முறையாக நேரடியாக இந்த சம்பவம் குறித்து மவுனம் கலைத்துள்ளார் ரஜினி.

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர், தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது. சத்தியமா விடவே கூடாது'' என கோபமாக பதிவிட்டுள்ளார்.

ரஜினி இந்த பதிவாக சமூகவலைதளங்களில் சத்தியமா_விடவே_கூடாது என்ற பெயரில் ஹேஷ்டாக் டிரெண்ட்டாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
'சூரரைப் போற்று' - மீண்டும் ஓடிடி சர்ச்சை'சூரரைப் போற்று' - மீண்டும் ஓடிடி ... வீழ்வேன் என்று காத்திருக்கும் கூட்டம்: சமூகவலைதளங்கள் மீது சரத்குமார் பாய்ச்சல் வீழ்வேன் என்று காத்திருக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

Raman - kottambatti,இந்தியா
02 ஜூலை, 2020 - 12:26 Report Abuse
Raman இவ்வளவு நாள் கோமாவில் இருந்தாரா?
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
02 ஜூலை, 2020 - 11:36 Report Abuse
Ellamman முடியல ..தாங்க முடியல.....
Rate this:
Sandru - Chennai,இந்தியா
02 ஜூலை, 2020 - 11:04 Report Abuse
Sandru என்ன காமராஜ் செத்து போய்ட்டாரான்னு இன்னும் கொஞ்சம் நாளில் இரங்கல் அறிக்கை விடுவான் இந்த கோழை
Rate this:
bigu -  ( Posted via: Dinamalar Android App )
02 ஜூலை, 2020 - 07:39 Report Abuse
bigu இனியும் இவர தமிழ்நாட்டில் பேச விட கூடாது
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
02 ஜூலை, 2020 - 06:23 Report Abuse
Mani . V அப்பாடா, சிஸ்டத்துக்கு நினைவு திரும்பி விட்டது.
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in