Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் வருகிறார் மந்த்ரா

01 ஜூலை, 2020 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Actress-Mantra-backs

தமிழ் சினிமாவில் 1996ல் வெளிவந்த 'ப்ரியம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மந்த்ரா. அதன் பின் விஜய்யுடன் 'லவ் டுடே', அஜித்துடன் 'ரெட்டை ஜடை வயசு' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருந்தாலும் தெலுங்கில் ஒரு பரபரப்பான ஹீரோயினாக 90களின் கடைசியில் இருந்தார்.

உதவி இயக்குனர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகியிருந்தார். மீண்டும் தமிழில் 'ஒன்பதுல குரு, வாலு, கவலை வேண்டாம்' ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

தற்போது ஒரு யு டியுப் சேனலை ஆரம்பித்து அதில் நிகழ்ச்சிகளைத் தருவதில் பிஸியாக இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இரண்டு பெரிய தெலுங்குப் படங்களில் நடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். முன்பைவிட உடல் இளைத்து ஸ்லிம் ஆகவே இருக்கிறார்.

தெலுங்கில் குடும்பப் பாங்கான படங்கள் அதிகம் வரும். அக்கா, அண்ணி, சித்தி, அம்மா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக அவை இருக்கும். அதனால் மந்த்ரா மீண்டும் பிஸியாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்.ஜே.சூர்யாவின் 2 படங்கள் எப்போது வரும்?எஸ்.ஜே.சூர்யாவின் 2 படங்கள் எப்போது ... 'சூரரைப் போற்று' - மீண்டும் ஓடிடி சர்ச்சை 'சூரரைப் போற்று' - மீண்டும் ஓடிடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Vijay - Chennai,இந்தியா
02 ஜூலை, 2020 - 20:58 Report Abuse
Vijay இவர்களுக்கு ரொம்ப பெரிய "மனசு"
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
02 ஜூலை, 2020 - 20:06 Report Abuse
Bhaskaran நாட்டிற்குமிக மிக முக்கியமான செய்தி இது
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
02 ஜூலை, 2020 - 18:47 Report Abuse
S. Narayanan தியேட்டர்ல படம் பாக்கலைன்னாலும் டிவி ல உங்க படம் பாப்போம். கவலைய விடுங்க.
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
02 ஜூலை, 2020 - 18:35 Report Abuse
Tamilnesan மந்த்ரா மீண்டும் வருகிறாரா அல்லது மீண்டு வருகிறாரா?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
02 ஜூலை, 2020 - 17:43 Report Abuse
 Muruga Vel அம்மணி ரொம்பவே பெருத்து விட்டார்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in