Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

6 மாதங்களில் 50 படங்கள் மட்டுமே ரிலீஸ்

01 ஜூலை, 2020 - 11:29 IST
எழுத்தின் அளவு:
6-months-only-50-films-released-this-year

தமிழ் சினிமா உலகில் அடுத்துள்ள ஆறு மாதங்களில் ஓடிடி தளங்களைத் தவிர சினிமா தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகுமா என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

கொரோனா தொற்று அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாக முழுமையாகக் குறைந்தால் மட்டுமே தியேட்டர்கள் திறக்கப்படும் என்று தெரிகிறது. அடுத்த மூன்று மாதங்களில் கொரோனா தொற்று சரியானால் கூட தியேட்டர்களுக்கு மக்கள் வருவார்களா என்பதும் சந்தேகம்தான்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியது. அது இந்த ஆண்டில் 100ஐத் தாண்டினாலே பெரிய விஷயம்தான்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 50 மட்டுமே. அதில் கடைசியாக வந்த நான்கு படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானவை. மேலும், சில படங்கள் அடுத்தடுத்து ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன. ஓடிடி தளங்களில் மாதத்திற்கு நான்கு படங்கள் வெளியானால் கூட ஆறு மாதங்களில் 24 படங்கள் மட்டுமே வெளியாகும்.

ஒருவேளை அக்டோபருக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டால் கூட முன்பைப் போல வாரத்திற்கு நான்கைந்து படங்கள் வெளிவர வாய்ப்பில்லை. அது போல அனைத்துத் தியேட்டர்களும் திறக்கப்படும் சூழ்நிலையும் இருக்காது.

திரையுலகத்தில் உள்ள ஒவ்வொருவருமே இந்த நிலைமை சீக்கிரமே சீரடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில்தான் உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்த சில்க் ஸ்மிதா!அடுத்த சில்க் ஸ்மிதா! எஸ்.ஜே.சூர்யாவின் 2 படங்கள் எப்போது வரும்? எஸ்.ஜே.சூர்யாவின் 2 படங்கள் எப்போது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02 ஜூலை, 2020 - 04:30 Report Abuse
skv srinivasankrishnaveni மரணப்போராட்டமே நடக்குது நாட்டுலே இந்த சினிமாக்காரலுக்கு படங்கள் ரிலீஸ் ஆவலோன்னு குமுறுறதுங்க மக்கள் மெயின் சிலவுகளுக்கு துட்டுஇல்லீயே ன்னு தவிக்குறாங்க எவண்டா சிலவி செய்துண்டு தியேட்டர்களுக்குவரப்போறான் அதுவும் இந்தகொரோனா பயம் லே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in