Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மோசடி கும்பலுடன் எனக்கு தொடர்பில்லை ; காமெடி நடிகர் வாக்குமூலம்

30 ஜூன், 2020 - 17:48 IST
எழுத்தின் அளவு:
Comedy-actor-explaint-in-police-enquiry

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை பூர்ணா.. கடந்த சில நாட்களுக்கு முன் பூர்ணாவின் தாயார் போலீஸாரிடம், தனது மகள் திருமண சம்பந்தம் பேச வந்த நபர்கள் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என்றும் தங்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என்றும் புகார் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது... இதையடுத்து இந்த விஷயம் தொடர்பாக போலீஸார் எடுத்த அதிரடி நடவடிக்கையால் சுமார் ஏழு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றுவதிலும் தங்கம் கடத்துவதிலும், இந்த கும்பல் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.. மேலும் விசாரணையில் இந்த கும்பலை சேர்ந்த ஒருவரிடம் பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் தர்மஜன் போல்காட்டி என்பவரது மொபைல் எண் இருந்ததையும் அவர்கள் அடிக்கடி பேசி வந்ததையும் கண்டுபிடித்த போலீஸார், தர்மஜனை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.

சிறப்பு விசாரணை குழுவின் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் தர்மஜன் போல்காட்டி.. அதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய தர்மஜன், தனக்கும் அந்த மோசடி கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், ஷாஜி பட்டக்கரா என்கிற ஒரு புரடக்சன் மேனேஜர் மூலமாக தனது மொபைல் நம்பரை வாங்கி, அந்த கும்பலில் உள்ள ஒருவர் தன்னை ஊரடங்கின்போது தொடர்பு கொண்டார் என்றும் கூறினார்.

மேலும், “அந்த நபர், தாங்கள் தங்க கடத்தலில் ஈடுபடுவதாகவும் அதற்கு நடிகைகள் பூர்ணா, மியா ஜார்ஜ் ஆகியோரை பயன்படுத்த இருப்பதாகவும் கூறி அவர்களது அலைபேசி எண்களை தருமாறு கூறினார்கள்.. நான் யாரோ சும்மா தமாஷுக்காக இப்படி செய்கிறார்கள் என நினைத்து அவர்களது நபர்களை தர மறுத்தேன்.. ஆனால் அடுத்த சில நாட்கள் தொடர்ந்து இதுபோல் பேசவே, போலீஸில் கூறி விடுவேன் என அவரை எச்சரித்தேன்... அதன்பின் அவர்கள் என்னை தொடர்புகொள்ளவில்லை” என்றும் கூறியுள்ளார் தர்மஜன் போல்காட்டி

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாளவிகாவிடம் வம்பிழுத்த விஜய்மாளவிகாவிடம் வம்பிழுத்த விஜய் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் : பூர்ணா வேண்டுகோள் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in