Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாளவிகாவிடம் வம்பிழுத்த விஜய்

30 ஜூன், 2020 - 17:44 IST
எழுத்தின் அளவு:
Vijay-fun-on-with-Malavika

பேட்ட படத்தில் சசிகுமாரின் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் மாளவிகா மோகனன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் தன்னிடம் வம்பிழுத்த கதையை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,

"மாஸ்டர் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். விஜய் உடன் நடிக்க யாருக்கு தான் பிடிக்காது. எனது முதல் நாள் படப்பிடிப்பே அவருடன் தான். எனக்கு நிறைய கஷ்டமான காட்சிகள் இருந்தன. முதல் நாள் என்பதால் எனக்கு பதற்றமாக இருந்தது. ஆனால் விஜய், என்னை பெரிதும் ஊக்குவித்தார். நான் நன்றாக நடிப்பதாக பாராட்டினார்.

ஆரம்பத்தில் அவர் அமைதியாக தான் இருந்தார். ஆனால் எளிதாக அணுகக்கூடியவர். பழகுவதற்கு இனிமையானவர். ஷாட் முடிந்ததும் கேரவேனுக்கு செல்ல மாட்டார். கொஞ்ச நாள் பழக்கத்திலேயே அவரது இன்னொரு முகத்தை பார்த்துவிட்டேன். விஜய் இவ்வளவு ஜாலியான ஆளான என பார்த்து வியந்துவிட்டேன். நிறைய ஜோக்கடிப்பார். சில சமயம் வேடிக்கையாக என்னை வம்பிழுப்பார். யாரை பற்றியும் எதிர்மறையாக பேசவே மாட்டார். பாசிட்டிவிட்டி என்றால் அது விஜய் தான்", என மாளவிகா மோகனன் விஜய்யை பாராட்டி தள்ளியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹரிஷுக்கு போட்டி போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய ஹீரோயின்கள்ஹரிஷுக்கு போட்டி போட்டு பிறந்தநாள் ... மோசடி கும்பலுடன் எனக்கு தொடர்பில்லை ; காமெடி நடிகர் வாக்குமூலம் மோசடி கும்பலுடன் எனக்கு தொடர்பில்லை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in