Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நந்திதாவின் அதிரடி ஆக்ஷன் படம் - ஜுலை 2ல் டிரைலர்

30 ஜூன், 2020 - 14:16 IST
எழுத்தின் அளவு:
Nandita-movie-releasing-in-OTT

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் நந்திதா ஸ்வேதாவும், ஐஸ்வர்யா ராஜேசும், இருவரின் கேரியைரையும் ஒப்பிடும்போது நந்திதா கொஞ்சம் ஸ்லோதான். அதனால் எப்படியாவது முன்னணி இடத்துக்கு வர தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் நந்திதா.

எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்கள் நந்திதாவுக்கு உதவி செய்தாலும் பல படங்கள் அவருக்கு பின்னடைவை கொடத்தது.

இந்நிலையில் அவர் ஹீரோயின் சப்ஜெக்ட் கதையான ஐபிசி 376 படத்தில் நடித்துள்ளார். இதில் முதன் முறையாக அவர் ஆக்ஷன் கேரக்டரில் நடித்திருக்கிறார். இதுவரை பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் நடித்து வந்தவருக்கு இது பெரிய தாவல் ஆக அமைந்தது. படத்தில் வரும் பல ஆக்ஷன் காட்சிகளில் நந்திதா டூப் இல்லாமல் நடித்திருக்கிறார் .

சண்டை இயக்குனர் ராம்குமார் சுப்பாராமன் இயக்கியுள்ள இந்த படம் பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான படம். படத்தின் தலைப்பும் அதைத்தான் குறிக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்தது.

இந்தப் படம் தியேட்டரில் வெளியாகி தனக்கு நல்ல திருப்புமுனையாக அமையும் என்று நம்பிக் கொண்டிருந்தார் நந்திதா. ஆனால் அதற்குள் ஊரடங்கு வந்துவிட்டது. இந்நிலையில் ஜூலை 2ல் படத்தின் டிரைலர் வெளிவருகிறது. இதற்கிடையே இப்படத்தை ஓடிடியில் வெளியாக ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குமரிக்கண்டத்தை ஆராயும் கோவை இளைஞர்கள் - 'சதுர்' படத்தில் இருக்கிறது விடைகுமரிக்கண்டத்தை ஆராயும் கோவை ... ஹரிஷுக்கு போட்டி போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய ஹீரோயின்கள் ஹரிஷுக்கு போட்டி போட்டு பிறந்தநாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in