Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குமரிக்கண்டத்தை ஆராயும் கோவை இளைஞர்கள் - 'சதுர்' படத்தில் இருக்கிறது விடை

30 ஜூன், 2020 - 14:10 IST
எழுத்தின் அளவு:
Kovai-youths-making-movie-based-on-Kumarikandam

கோவை இளைஞர்களின் முயற்சியில் உருவாகும் 'சதுர்' படம், இந்தாண்டு இறுதியில் வெளியாகிறது. படத்தின் இயக்குனர் அகஸ்டின் பிரபு கூறியதாவது: புது முகங்கள் நடிக்கும் ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக, 'சதுர்' இருக்கும். நாயகனாக கோவையை சேர்ந்த அமர், நாயகியாக ஹரிஜா ஆகியோர் நடித்துள்ளனர்._இவர்களுடன் அஜீத், ஜீவா, செல்லா, கிருஷ் பாலா, கிருஷ் ஜெகன், ராஜன், தாமோதரன், ஸ்டீபன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை உடுமலையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் செரில் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

குமரிக்கண்டத்தின் அழிவை தேடி அறியும் முயற்சி தொடர்பான அறிவியல் கலந்த கற்பனையாக, இந்த படத்தின் கதை தயார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கான முயற்சி மூன்றாண்டுக்கு முன் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக தமிழகம், கேரளாவின் முக்கிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்போது போஸ்ட் புரடக்சன் வேலைகள் நடந்து வருகின்றன. படத்தில் அனைத்து முக்கிய பொறுப்புகளையும், கோவையை சேர்ந்தவர்களே, அதுவும் புதுமுகங்களே ஏற்று செய்துள்ளது சிறப்பம்சம். அனைத்து தரப்பினரையும் கவரக்கூடியதாக படம் இருக்கும். இந்தாண்டு இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என்றார்.

படத்தின் நாயகன் அமர் கூறுகையில், ''கோவையில் இருந்து கொண்டே, சிறப்பான ஒரு படம் தயாரிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

பேட்டியின்போது, படத்தின் நாயகி ஹரிஜா, இசையமைப்பாளர் ஆதர்ஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினிகாந்த்திற்கு அடுத்து சிரஞ்சீவியுடன் நடிப்பாரா குஷ்பு ?ரஜினிகாந்த்திற்கு அடுத்து ... நந்திதாவின் அதிரடி ஆக்ஷன் படம் - ஜுலை 2ல் டிரைலர் நந்திதாவின் அதிரடி ஆக்ஷன் படம் - ஜுலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in