Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எங்கே செல்கிறது சினிமா தரம் - ஆபாசப்பட செலவு சில லட்சம்: கோடியை நெருங்கும் வசூல்

30 ஜூன், 2020 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Naked-movie-made-in-cost-lakhs,-but-collection-in-crore

தென்னிந்தியத் திரையுலகில் ஒரு காலத்தில் மலையாளப் படங்கள் என்று சொன்னாலே அதை ஆபாசப்படங்களாக மட்டுமே பார்த்த ரசிகர்கள் அதிகம். மலையாளத்தில் ஷகீலா போன்ற சில நடிகைகள் நடித்த ஆபாசப் படங்கள் தென்னிந்திய முழுவதும் வெளியாகும். அந்தப் படங்கள் மம்முட்டி, மோகன்லால் நடித்த படங்களை விட அதிக வசூலைப் பெறும். ஒரு கட்டத்தில் ஷகீலா நடித்த படங்களுக்குத் தடை விதித்து தங்களது சினிமாவைக் காப்பாற்றியது மலையாளத் திரையுலகம்.

ஆனால், தெலுங்குத் திரையுலகம் ராம்கோபால் வர்மா என்ற ஒரு இயக்குனரால் தனது பெயரை தற்போது இழக்கத் தொடங்கியிருக்கிறது. ஷகீலா நடித்த படங்களாவது தியேட்டர்களில் வெளியானது. ஆனால், வர்மா அவர் எடுத்த இரண்டு ஆபாசப் படங்களை நேரடியாக இணையதளங்களில் வெளியிட்டார்.

இரு தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட நேக்டு நங்கா நக்னம் என்ற படத்திற்கு 200 ரூபாய் கட்டணம் வைத்தார். அந்தப் படத்தை இதுவரையில் 40 ஆயிரம் பேர் அந்தக் கட்டணத்தை செலுத்தி பார்த்துள்ளார்களாம். அதன் மூலம் சுமார் 80 லட்ச ரூபாய் வரை வசூல் கிடைத்துள்ளது. இந்த 22 நிமிடப் படத்திற்காக சில லட்சங்களை மட்டுமே செலவு செய்துள்ளார் வர்மா. ஆனால், அவருடைய லாபம் மட்டுமே பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

வர்மாவின் இந்த மோசமான வழியில் மேலும் சிலர் இப்படி ஆபாசப்படங்களை எடுத்து வெளியிட ஆரம்பித்தால் என்ன செய்வது என தெலுங்குத் திரையுலகினர் கதிகலங்கிப் போய் உள்ளார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி இல்லாமல் 'அண்ணாத்த' படப்பிடிப்பு ?ரஜினி இல்லாமல் 'அண்ணாத்த' ... ஓடிடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தமன்னா? ஓடிடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in