Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி இல்லாமல் 'அண்ணாத்த' படப்பிடிப்பு ?

30 ஜூன், 2020 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Annatha-shooting-without-rajini

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


ஆனால், கொரானோ ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. அதனால், திட்டமிட்டபடி 2021 பொங்கலுக்கு படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் அளவிற்குத்தான் முடிந்திருக்கும் என்கிறார்கள். இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முடித்தால்தான் அதன்பின் மூன்று மாத காலத்தில் இறுதிக்கட்டப் பணிகளை முடித்து பொங்கலுக்கு படத்தை வெளியிட முடியும்.


கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழியும் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன் என ரஜினிகாந்த் கூறிவிட்டதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள். ஆகவே, அவர் இல்லாத மற்ற காட்சிகளை படப்பிடிப்பு ஆரம்பமான பின் முடித்துவிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என படத்தில் பல நட்சத்திரங்கள் உள்ளதால் அனைவரையும் மீண்டும் ஒருங்கிணைத்து படப்பிடிப்பை நடத்த வேண்டி உள்ளது. அனைத்தையும் முடித்தாலும் படத்தை 2021 கோடை விடுமுறையில் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
'லாக்கப்' நிலையும் இது தான்!'லாக்கப்' நிலையும் இது தான்! எங்கே செல்கிறது சினிமா தரம் - ஆபாசப்பட செலவு சில லட்சம்:  கோடியை நெருங்கும் வசூல் எங்கே செல்கிறது சினிமா தரம் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02 ஜூலை, 2020 - 05:05 Report Abuse
skv srinivasankrishnaveni தேவையே இல்லாமல் ஒரு ஸ்டாரை தூக்கின்நுஆடுவீங்க ரெண்டுபடம் ஓடலியானால் டமால்னு தூக்கி போட்டுபோவீங்க எல்லா ரசிகா என்றுகேனம் களும் படம்பார்த்துட்டு பிடிச்ச ரசிக்கவேண்டும் பிடிக்கலேன்னா கண்டுக்காமப்போயினனே இருக்கவேண்டும் ரசிகர்மன்றம் லொட்டுலொசுக்கு எல்லாம் தேவையா ??????ஐயா நடிகன் நடிக்க காசுபாலகோடிகள் வாங்கிண்டுபோடுவான் ரசிகன் பேக்குபோல கைக்காசை சிலவு செய்துட்டு ங்கேன்னு முழிப்பான்
Rate this:
Meenakshi - Chennai,இந்தியா
01 ஜூலை, 2020 - 09:03 Report Abuse
Meenakshi படமே இல்லாமல் பல நடிகர்கள் இருக்கும் பொது, ரஜினி இல்லாமல் படம் இருந்தால் என்ன அல்லது இல்லாவிட்டால் என்ன/
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
01 ஜூலை, 2020 - 06:59 Report Abuse
meenakshisundaram அவருக்கு 'வயசு ஆனதினாலே 'டூப் 'போட்டுத்தான் எடுத்தாங்க இப்போதைக்கு ,அப்படியே தொடர வேண்டியது தானே இப்படி முகமூடி போட்டு நடிப்பது படா கேவலமாய் இல்லையா?
Rate this:
Vijay - Chennai,இந்தியா
30 ஜூன், 2020 - 18:36 Report Abuse
Vijay எந்திரன் படத்தை கூட இப்படி தானே எடுத்தார்கள்
Rate this:
Girija - Chennai,இந்தியா
30 ஜூன், 2020 - 12:43 Report Abuse
Girija குஸ்பு போன இடமெல்லாம் புல்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in