தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | பிரசாத் ஸ்டுடியோவால் மன உளைச்சல் : விருதுகளை திருப்பி தர இளையராஜா முடிவு | மீனா விடுத்த சவால் | தனுஷ் படத்தில் உஷாரான கார்த்திக் நரேன் |
சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை - மகன் மரணம் அடைந்த சம்பவம், தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட போலீசாருக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என குரல்கள் அதிகம் ஒலிக்கின்றன. அரசியல்வாதிகள், திரையுலகினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ.,க்கு மாற்றப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில், ''சாத்தான்குளம் வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே. குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். சிபிஐ., விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி'' என பதிவிட்டுள்ளார்.