Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரசன்னாவைத் தொடர்ந்து டாப்ஸிக்கும் ஷாக் கொடுத்த கரண்ட் பில்!

29 ஜூன், 2020 - 16:51 IST
எழுத்தின் அளவு:
Electricity-bill-charge-gave-shocks-to-Taapsee

கொரோனாவிற்குப் போட்டியாக மக்களை அலறச் செய்து கொண்டிருக்கிறது கரண்ட் பில் என்றுதான் கூற வேண்டும். மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு விட்டதால், ரீடிங் எடுக்க முடியாத நிலை மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டது. இதனால் சேர்த்து வைத்து நான்கு மாத கரண்ட் பில்லை மக்களிடம் வசூலித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஊரடங்கால் வேலையை இழந்து, வருமானத்திற்கு வழியில்லாமல், சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வரும் மக்கள், நிச்சயம் மின்சாரக் கட்டணத்தில் அரசு ஏதாவது சலுகை தரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பல இடங்களில் மானியம்கூட இல்லாமல் மின்கட்டணம் கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

சாமானிய மக்கள் மட்டும் என்றில்லாமல் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் இந்த பிரச்சினையில் சிக்கியுள்ளனர். நடிகர் பிரசன்னா தனது வீட்டு மின் கட்டணம் பற்றி வெளியிட்ட டுவீட் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பிரசன்னாவின் டுவீட்டுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, ரீடிங் எப்படி எடுக்கப்படுகிறது என்பது பற்றியும் மின்வாரியம் விளக்கம் அளித்தது. ஆனாலும் இந்தப் பிரச்சினை ஓய்வதாக இல்லை.

தற்போது டாப்ஸியும் தனது வீட்டிற்கு வந்த அதிகப்படியான மின்கட்டணம் பற்றி காட்டமாக டுவீட்களை வெளியிட்டுள்ளார். காரணம் வாரம் ஒருமுறை சுத்தப்படுத்துவதற்காக மட்டுமே திறக்கப்பட்ட, ஆளே குடியிருக்காத அவரது வீட்டிற்கு மின் கட்டணமாக ரூ. 36 ஆயிரம் வந்துள்ளது தான்.

இது தொடர்பாக மின் கட்டண ரசீதோடு டாப்ஸி வெளியிட்டுள்ள பதிவில், '3 மாதங்கள் லாக்டவுன். இந்நிலையில் மின் கட்டணம் இந்த அளவுக்கு அதிகரிக்க புதிதாக எதை பயன்படுத்தினோம் அல்லது வாங்கினோம் என்று வியக்கிறேன். @Adani_Elec_Mum, எந்த வகையான மின்சாரத்திற்காக எங்களுக்கு இந்த கட்டணம்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 'யாருமே தங்காத அபார்ட்மென்ட்டுக்கு இந்த மின் கட்டணம். வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய மட்டுமே அந்த அபார்ட்மென்ட்டுக்கு செல்கிறோம். யாராவது எங்களுக்கு தெரியாமல் அந்த அபார்ட்மென்ட்டை பயன்டுத்துகிறார்களோ, அதை தெரிந்து கொள்ள நீங்கள் உதவி செய்துள்ளீர்களோ என்று வியக்கிறேன்' எனவும் நக்கலாக அவர் பதிவு வெளியிட்டுள்ளார்.

டாப்ஸியின் இந்த கோபமாக டுவீட்டுகளை பார்த்த அதானி எலக்ட்ரிசிட்டி அவருக்கு ஒரு லிங்கை அனுப்பி அதை கிளிக் செய்து பில் விபரங்களை பார்க்குமாறு கூறியது. ஆனால் அந்த லிங்கை கிளிக் செய்தால் அனுமதி இல்லை என்று வருவதால் மேலும் கடுப்பாகி விட்டார் டாப்ஸி. 'இது தான் உங்கள் பதிலா?' என அவர் கோபமாகக் கேட்டுள்ளார்.

டாப்ஸிக்கு மட்டுமல்ல பல பாலிவுட் பிரபலங்களும் இதே போன்ற பிரச்சினையில் சிக்கியுள்ளனர். இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜெய் மேத்தா, நடிகை ராதாவின் மகளான கார்த்திகா, நகைச்சுவை நடிகர் வீர் தாஸ், நடிகர் தினோ மோரியா போன்றோரும் தங்களுக்கு மின் கட்டணம் கூடுதலாக வந்திருப்பதாக டுவிட்டரில் ஆதங்கத்தை பதிவு செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாவம் வனிதா - 3வது திருமணத்திலும் பிரச்சினைபாவம் வனிதா - 3வது திருமணத்திலும் ... என்ன ஒரு முட்டாள்தனமான செயல் - எஸ்பிபி கோபம் என்ன ஒரு முட்டாள்தனமான செயல் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

N Chandrasekaran - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30 ஜூன், 2020 - 13:52 Report Abuse
N Chandrasekaran Very nice. This is what you can expect from private owners who controls the basic needs of individuals. Especially Adhani Electricity wow great They can charge anything coz they have blanket approval to charge whatever the amount they need to achieve their profitablity.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in