Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாவம் வனிதா - 3வது திருமணத்திலும் பிரச்சினை

29 ஜூன், 2020 - 16:43 IST
எழுத்தின் அளவு:
Vanithas-3rd-marriage-also-starts-with-problem

முந்தைய திருமணங்களால் ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நடிகை வனிதா விஜயகுமார், இந்த மூன்றாவது திருமணமாவது தனக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்து தரும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். சிங்கிள் மதராக சமூகத்தில் போராடி வந்த அவர், 40 வயதில் மூன்றாவது திருமணம் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். ஆனால் பாவம் இந்த திருமணத்திலும் ஆரம்பத்திலேயே அவரைப் பிரச்சினைகள் துரத்தத் தொடங்கி விட்டது.

எப்படியும் பிரச்சினை வரும், ஆனால் அது தன் பக்கத்தில் இருந்து தான் வரும் என எதிர்பார்த்துத் தான் பீட்டர் பாலை கரம் பிடித்தார் வனிதா. ஆனால் வனிதாவே எதிர்பாராத விதமாக இம்முறை பீட்டர் பாலின் பக்கமிருந்து பிரச்சினை வெடித்துள்ளது. தனக்கு முறைப்படி விவாகரத்து தராமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டரின் முதல் மனைவி போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே திருமணத்தில் உதட்டு முத்தம் கொடுத்தது தொடர்பாக வனிதா திருமணத்தை சமூகவலைதளங்களில் விவாதப் பொருளாக்கி விட்டனர். தற்போது அந்த சர்ச்சை தீர்வதற்குள்ளாகவே பீட்டரின் முதல் மனைவி அடுக்கடுக்காகக் கூறி வரும் புகார்கள் வெறும் வாய்களுக்கு கிடைத்த அவல் ஆகியிருக்கிறது.

ஒரு கோடி ரூபாய் கேட்டுத்தான் பீட்டரின் முதல் மனைவி தன் மீது இப்படி குற்றம் சாட்டியிருக்கிறார் என வனிதா தன் பக்க விளக்கமாகக் கூறி இருக்கிறார். ஏற்கனவே குடும்பப் பிரச்சினைகள், பிக் பாஸ் வீட்டு ரகளைகள் என வனிதா சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மக்களுக்கு அத்துப்படி.

தற்போது அந்த வரிசையில் அவரது இந்த மூன்றாவது திருமணமும் சேர்ந்து விட்டது. பார்ப்போம் இந்தப் பிரச்சினையை அவர் எப்படி கையாளப் போகிறார் என. ஆனாலும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தனது இந்த புதிய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே ஆரம்பித்திருப்பதாக அவர் கூறியிருப்பது இங்கே குறிப்பிடதக்கது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
பிகில் 'ராயப்பன்'ஆக விஜய் நடிக்க சுஷாந்த் தான் காரணம்!பிகில் 'ராயப்பன்'ஆக விஜய் நடிக்க ... பிரசன்னாவைத் தொடர்ந்து டாப்ஸிக்கும் ஷாக் கொடுத்த கரண்ட் பில்! பிரசன்னாவைத் தொடர்ந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Sivagiri - chennai,இந்தியா
03 ஜூலை, 2020 - 12:31 Report Abuse
Sivagiri அடடா பாவம் ஆனாலும் திருமணம் செய்து கொண்டால் பெண்ணுக்கு பாதுகாப்பான வாழ்வு என்பதில் நம்பிக்கை இருக்கிறது . . ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை . . .
Rate this:
Gurumoorthy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02 ஜூலை, 2020 - 18:07 Report Abuse
Gurumoorthy she became infamous from Big Boss show. See how this big boss show organizers are connecting the artists towards their e conversions. Vanitha from Hindu family moving into Christianity. So the pseudo secular person Kamal hassan doing the job of conversions on this platform. Most of the participants in Big Boss are controvarsy persons leading for conversions. Public should be aware of these gimmicks of Kamal and his Big Boss team. BE CAREFUL
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
01 ஜூலை, 2020 - 18:23 Report Abuse
Tamilnesan வனிதா விஜயகுமார் அவர்கள், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ், என்கிற மூதுரையை, பதினாறு செல்வங்களுக்கு பதில் பதினாறு புருஷர்கள் என்று தவறாக புரிந்து கொண்டு விட்டார் போலும்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
01 ஜூலை, 2020 - 16:07 Report Abuse
Endrum Indian என்னது வெறும் வெறும் 1 கோடியா???அதிகமாக கேளடி பெண்ணே ஒரு 10 கோடியாவது கேளு
Rate this:
Swaminathan Nath - kumbakonam,இந்தியா
01 ஜூலை, 2020 - 09:10 Report Abuse
Swaminathan Nath இவர்களுக்கு திருமணம் என்பது சட்டை மாற்றுவது போல,
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in