பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
பிகில் படத்தில் இள வயது விஜய்யை விட அனைவருக்கும் மிகவும் பிடித்தது அப்பா ராயப்பன் கேரக்டர் தான். அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களிலுமே விஜய் கலக்கி இருந்தார். அதிலும் குறிப்பாக வயதான தோற்றத்தில் ராயப்பன் கேரக்டரில் அப்ளாஸ் அள்ளினார்.
ஆனால் இந்தப் படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளில் விஜய்க்கு அப்பாவாக ராயப்பன் கேரக்டரில் மூத்த நடிகர் யாரையாவது நடிக்க வைக்கத்தான் படக்குழு திட்டமிட்டிருந்ததாம். யாரை நடிக்க வைக்கலாம் என ஆலோசித்துக் கொண்டிருந்த போது, பாலிவுட் காஸ்மெட்டாலஜிஸ்ட் பிரீத்தி ஸ்ரீ என்பவர் சிச்சோர் படத்தில் சுஷாந்த் அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடித்திருப்பது பற்றி கூறியிருக்கிறார். கூடவே அப்படத்தில் சுஷாந்தின் வயதான அப்பா கேரக்டரின் புகைப்படத்தையும் காட்டியிருக்கிறார்.
இதைப் பார்த்து வியந்து போன படக்குழு, பிகிலில் விஜய்யையே அப்பா கேரக்டரில் நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து விட்டனராம். இதை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.