பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
அக்மார்க்க லண்டன் மாடல் அழகியான எமி ஜாக்சன், 'மதராசபட்டினம்' படத்தின் மூலம் தமிழ் நடிகை ஆனார். பின்னர் பாலிவுட் நடிகை ஆனார். தற்போது லண்டனில் கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறார். விலங்குகளை பாதுகாக்கும் பீட்டா அமைப்பிலும் பணியாற்றி வருகிறார்.
கொரோனா பரவலுக்கு முக்கியமான இடமாக இருப்பது இறைச்சி கூடங்கள் தான் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் எமி. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ''அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளில் உள்ள இறைச்சி கூடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் மையங்களாக இவைகள் இருக்கிறது. இறைச்சி கூடங்களில் உள்ள செயற்கை குளிர்ச்சி. ஈரமான தரைப்பகுதி, சரியான காற்றோட்ட வசதி இல்லாதது போன்றவை தான் இதற்கு காரணம். கொரோனா பரவுவதற்கு இறைச்சி கூடங்கள் காரணமா என்று தொலைக்காட்சிகளில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் எமி.