Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மோசடி கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்: பூர்ணா அறிவுரை

29 ஜூன், 2020 - 11:10 IST
எழுத்தின் அளவு:
Be-alert-from-foregery-gang-says-Poorna

திருமணம் என்ற போர்வையில் நடிகை பூர்ணாவிடம் பணம் பறிக்க முயன்றது ஒரு மோசடி கும்பல். பூர்ணாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் இந்த கும்பலை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பூர்ணா கூறியதாவது:

எங்கள் உறவினர்களின் நண்பர்கள் மூலம் தனது பெயர் அன்வர் என்று சொல்லி எங்கள் குடும்பத்தினருடன் அந்த நபர் அறிமுகமானார். முதலில் நம்பினோம், பிறகு அவர்களை நேரில் பார்த்ததும் சந்தேகம் வந்தது. அவர்களை பற்றிய விவரங்களை கேட்டதும் பதில் சொல்லாமல் ஓடிவிட்டனர். அதன்பிறகுதான் போனில் பணம் கேட்டு மிரட்டினார்கள். வீட்டில் இருந்து வெளியே வரும்போது பார்த்துக் கொள்கிறோம் என்று எச்சரித்தனர்.

என்னைப்போல் வேறு யாரும் பாதிக்க கூடாது என்றுதான் புகார் அளித்தேன். பலர் இவர்களால் பாதிக்கப்பட்டது இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. சினிமா வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பலர் வருவார்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல இளம் பெண்கள் கொச்சியில் ஓட்டல்களில் தங்கி நடிக்க வாய்ப்பு தேடுகிறார்கள். யார் வாய்ப்பு வாங்கி தருவதாக அணுகினாலும் அவர்களை பற்றி நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டு முடிவு எடுங்கள்.

இவ்வாறு பூர்ணா கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இன்று 95வது பிறந்த நாள்: நாடகத்தில் பாகுபலி பிரமாண்டத்தை படைத்தவர் ஆர்.எஸ்.மனோகர்இன்று 95வது பிறந்த நாள்: நாடகத்தில் ... அடுத்தாண்டு பிப்., 28ல் கோல்டன் குளோப் விருது அடுத்தாண்டு பிப்., 28ல் கோல்டன் குளோப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sivakumar - chennai,இந்தியா
29 ஜூன், 2020 - 15:32 Report Abuse
sivakumar நீ பத்திரமா இரு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in