Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பீட்டர் பாலின் முதல் மனைவி போலீஸில் புகார் - பணம் பறிக்க திட்டம் என்கிறார் வனிதா

28 ஜூன், 2020 - 14:15 IST
எழுத்தின் அளவு:
Peter-pauls-first-wife-complaint-:-Vanitha-Reply

பீட்டர் பால் என்பவரை நடிகை வனிதா விஜயகுமார் நேற்று(ஜுன் 28) கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். வனிதாவின் இல்லத்தில் இந்த திருமணம் எளிமையாக நடந்தது. நடிகை அம்பிகா உள்ளிட்ட ஒரு சில திரைப்பிரபலங்களுடன் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில் பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், சட்ட ரீதியாக தனக்கு விவாகரத்து கொடுக்காமலே வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதுப்பற்றி வனிதாவிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது : எதிர்பார்த்த ஒன்று தான். 8 ஆண்டுகளுக்கு முன்னரே பீட்டர் அவரை பிரிந்து வந்துவிட்டார். நாங்கள் திருமணம் செய்வது அவருக்கு தெரியும். வேண்டுமென்றே பணம் பறிக்கவே இது போன்று புகார் கொடுத்துள்ளார். ரூ.1 கோடி பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கிறார். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயார். பீட்டர் பால் ரொம்ப அன்பானவர். சுறுசுறுப்பின் சிகரம். வெற்றி, புகழ் வரும்போது பிரச்னைகள் வரும். சினிமாவில் இருக்கும் நான் ஏற்கனவே இதுபோன்று நிறைய பார்த்துவிட்டேன். இது எங்கள் வாழ்வை பாதிக்காது. நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
ஆபாசப்படம் - அரை மணி நேரத்தில் 50 லட்சம் சம்பாதித்த ராம்கோபால் வர்மாஆபாசப்படம் - அரை மணி நேரத்தில் 50 ... 'காக்டெயில்' - ஓடிடியில் வரிசை கட்டும் படங்கள் 'காக்டெயில்' - ஓடிடியில் வரிசை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Tamilnesan - Muscat,ஓமன்
29 ஜூன், 2020 - 19:38 Report Abuse
Tamilnesan இந்தியாவை சீரழித்தது, கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் போன்றவற்றை சீரழித்தது இவர்களை போன்றவர்கள்.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
29 ஜூன், 2020 - 14:35 Report Abuse
Sridhar இந்த பொம்பளைய ஏன் பிக் பாஸுக்கு எடுத்தான்னு இப்போதான் புரியுது.
Rate this:
29 ஜூன், 2020 - 11:25 Report Abuse
chandran, pudhucherry கேஸ் போட்டு ஒரு வருடம் ஓட்டுங்க அப்புறம் ஹிஹிஹி கழட்டி விட்டுடலாம்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
29 ஜூன், 2020 - 09:24 Report Abuse
Girija இந்த சனியண்களின் பிரச்சனை செய்திக்கு படங்கள் போடாதீர்கள் .
Rate this:
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
29 ஜூன், 2020 - 05:38 Report Abuse
tamilvanan விவாக ரத்து வாங்கினாரா? இதை உறுதி செய்யுங்கள் அம்மணியாரே. இல்லாவிடில் தாங்கள் என்ன தான் கரடியாக கத்தினாலும், பீட்டர் பஜனை செய்தாலும், உங்கள் திருமணம் சட்டப்படி செல்லாது. உங்கள் ஹீரோ பீட்டர் ஜெயிலில் இருப்பார். முதல் மனைவி கேட்கும் பணத்தை கொடுத்து விடுங்கள். உங்கள் தந்தை உதவி செய்வார்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in