திருமணத்திற்கு பிறகு ஆனந்தி நடிக்கும் தமிழ் படம் | முடிவுக்கு வந்தது அநீதி | பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் |
நடிகர் விஜயகுமார், மறைந்த நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சில படங்களில் கதாநாயகியாக நடித்து, கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகப் பிரபலமானவர்.
ஏற்கெனவே இரண்டு திருமணம் செய்து கொண்டு அந்த திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட வனிதா, நேற்று மூன்றாவதாக பீட்டர்பால் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணப் புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின.
அந்தப் புகைப்படங்களில் வனிதாவும், பீட்டரும் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுக் கொண்ட புகைப்படும் இடம் பெற்றிருந்தது. அந்தப் புகைப்படத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நமது கலாச்சாராப்படி இப்படி மற்றவர்களுக்கு முன்னிலையில் முத்தமிட்டுக் கொள்ளவும் மாட்டோம், அதை புகைப்படமாகப் பதிவிட்டு வெளியிலும் விடமாட்டோம். ஆனால், இதையெல்லாம் ஒரு பரபரப்புக்காகவே வனிதா செய்துள்ளார் என பலரும் அவரை கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும், தங்களது மகள்களுக்கு முன்பு வனிதா இப்படி செய்தது பெரும் தவறு என்றும் திட்டுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா பரவலை தடுக்க கண்டிப்பாக முகக்கவசத்தையும், சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். ஆனால் இவர்களது திருமணத்தில் அது கடைப்பிடிக்கப்படவில்லை. இதையும் குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, பீட்டர் பாலின் முதல் மனைவி இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதாக ஒரு பரபரப்பு எழுந்துள்ளது.