Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரும்புத்திரையின் 2ம் பாகமா சக்ரா? - டிரைலர் ஒரு பார்வை

28 ஜூன், 2020 - 11:17 IST
எழுத்தின் அளவு:
Did-Chakra-movie-is-part-2-of-Irumbuthirai

விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் சக்ரா. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளிவருகிறது. எம்.எஸ்.ஆனந்தன் என்ற புதுமுகம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஷால் ராணுவ வீரராக நடித்துள்ளார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் டிரைலரும், முதன்முறையாக டிரைலரின் ஸ்கிரிப்டும் வெளியிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தை நினைவுபடுத்தவதாக அமைந்துள்ளது. அதாவது இதுவும் ஆன்லைன் ஹேக்கர்களின் மோசடி பற்றிய படம்தான்.

டிரைலர் சொல்வது என்ன?.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சென்னையில் போலீஸ் முழு கண்காணிப்பில் இருந்தாலும் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் ஒரே நேரத்தில் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதனால் ஒட்டு மொத்த நகரமும் என்ன நடக்கிறது என தெரியாமல் பதற்றத்தில் இருக்கிறது. அதில் ஒரு வீட்டில் ராணுவ வீரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அசோக சக்கரத்தை அந்த திருடர்கள் கொள்ளையடித்து சென்று இருக்கின்றனர். இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுக்க இதன் பின்னணி உடன் ஹேக்கர்களின் மோசடி நிகழ்வுகளையும் கூறும் விதமாக அமைந்துள்ளது. இந்த கதையை பார்க்கும்போது கிட்டத்தட்ட இது இரும்புத்திரை படத்தின் 2ம் பாகமாக பார்க்க தெரிகிறது.

டிரைலர் ஸ்கிரிப்ட் இது...

போலீஸ் 1: அடையார் சர்க்கிள்ல நடந்திருக்கு .ஓவர். ஏழு வீட்ல ராபரி.

போலீஸ் 2: பெசன்ட் நகர் 13 வீட்ல ராபரி நடந்திருக்கு ஓவர்.

நாயகன் விஷால்: ஆகஸ்ட் 15 சுதந்திர தினம். டோட்டல் சென்னை சிட்டியே அதிகப்படியான கண்காணிப்புக்குள்ள இருக்குற ஒரு நாள், ஆனா அன்னிக்கு... இது ஏதோ பற்றிக்குலர் ஏரியாவுல, இல்ல பற்றிக்குலர் ஸ்ட்ரீட்ல , நடந்த ராபரி கிடையாது. திஸ் இஸ் சம்திங் பிக்.

கமிஷனர் : 49 வீடுய்யா, சிட்டியே பதறிகிட்டு இருக்கு

போலீஸ் இன்ஸ்பெக்டர்: மத்த வீட்ல கை வச்சது பிரச்சனை இல்லய்யா, இந்த வீட்ல கை வச்சதுதான் பிரச்சனை அசோக சக்ரா,மிலிட்டரில குடுக்குற மிகப்பெரிய கவுரவம், அந்த மெடல திருடிருக்கான், சும்மா விட்ருவானா அவன்?

நாயகி: நீங்க போலீசா?

நாயகன்: மிலிட்டரி ...!

நாயகி: இந்த சென்சிட்டிவான கேஸ் நான் தான் இன்வஸ்டிகேட் பண்றேன் சந்துரு, கூடிய சீக்கிரமா அந்த புறம்போக்குகளை பிடிப்பேன்

நாயகன் : ஒரு நாட்டையே அச்சுறுத்துற தீவிரவாதிகள் ஆக்டிவிட்டீஸை கண்காணிக்க ஒரு நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்ஸி பண்ற ஆராய்ச்சிய விட, ஒரு சராசரி மனிதனோட தேவைகளையும், அவனோட ஆசைகளையும் கண்டுபிடிக்கிறதுக்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி பண்ற ஆராய்ச்சிதான் அதிகம்னு சொல்ல வர்றீங்க..

நாயகி: கேர்புல்லா இருங்க , சஸ்பெக்ட் எப்ப வேணா அட்டாக் பண்ணலாம்.....

நாயகன் குரல்: நிச்சயமாக நாம் தேடிட்ருக்குற கிரிமினல் , நம்ம கண்ணுக்கே, தெரியமாட்டான்

குரல்: யாரோ ஹேக் பண்ணிருக்காங்க...

நாயகன் : இப்பதான் சீண்டி விட்ருக்கேன் தி கேம் பிகின்ஸ். நம் கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டும் இல்ல, வயர்லஸ் நெட்ஒர்க்கும் கூட ஆபத்துதான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சாத்தான்குளம் சம்பவம் : அதிகார வன்முறை - குற்றம் செய்தவர்கள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும் : சூர்யாசாத்தான்குளம் சம்பவம் : அதிகார ... ஓடாத படங்களுக்கெல்லாம் வருடக் கொண்டாட்டங்கள் ஓடாத படங்களுக்கெல்லாம் வருடக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in