Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிறிஸ்துவ முறைப்படி திருமணம் : வனிதாவை முத்தமிட்டு மனைவியாக ஏற்ற பீட்டர் பால்

27 ஜூன், 2020 - 16:06 IST
எழுத்தின் அளவு:
Vanitha---Peter-paul-wedding-happend

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதா. சந்திரலேகா படம் மூலம் விஜய் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவர் அதன்பின் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவருக்கு நடந்த இரண்டு திருமணங்கள் தோல்வியை தழுவின. முதல் கணவர் ஆகாஷ் மூலம் ஒரு மகன், மகளும், இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் மூலம் ஒரு மகளும் உள்ளனர். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.

இந்நிலையில் இயக்குனர் பீட்டர் பால் என்பவை திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதற்கு இவர்களின் மகள்களும் ஆதரவு கொடுத்ததனர். இதனால் மகிழ்ச்சியோடு திருமண வேலைகளை கவனித்து வந்தார். இவர்களது திருமணம் இன்று(ஜுன் 27) வனிதாவின் இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது.



கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்த பீட்டர் பால், வனிதாவை முத்தமிட்டு மனைவியாக ஏற்றுக் கொண்டார். இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. அம்மாவின் திருமணத்தை கண்டு மகள் கண்கலங்கினார்.

முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் வனிதா தனது கையில் பீட்டல் பால் பெயரையும், பீட்டர் பால் தனது கையில் வனிதா பெயரையும் பச்சை குத்திக் கொண்டனர். மேலும் தன் அம்மாவிடம் இருந்து வைர மோதிரங்கள் திருமண பரிசாக கிடைத்துள்ளது. இதை அம்மாவின் நண்பர் பரிசளித்ததாக பகிர்ந்தார் வனிதா.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவின் வேகம் தீவிரம் எடுத்து வரும் வேளையில் திருமணத்தில் பங்கேற்றவர்கள் போதிய சமூக இடைவெளியையோ, முககவசமோ அணியவில்லை.










Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
அதிக மின் கட்டணம், நடிகைகள் கோபம்அதிக மின் கட்டணம், நடிகைகள் கோபம் பூர்ணாவை மிரட்டிய மோசடி கும்பலில் இன்னும் 3 பேர் கைது பூர்ணாவை மிரட்டிய மோசடி கும்பலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

Raja - Thoothukudi,இந்தியா
29 ஜூன், 2020 - 20:59 Report Abuse
Raja கிறிஸ்தவ கலாசாரபடி மூணாவது கல்யாணம். இந்த கல்யாணம் மூலம் பிறக்கும் குழந்தைகள் முதல் கல்யாணத்தில் பிறந்த குழந்தைகளுடன் விளையாடும். அதன்பின் நாலாவது கல்யாணத்துக்கு அச்சாரம் போடப்படும்.
Rate this:
karutthu - nainital,இந்தியா
29 ஜூன், 2020 - 15:57 Report Abuse
karutthu இவருக்கு வேறு பெண் கிடைக்கவில்லையா ?
Rate this:
Girija - Chennai,இந்தியா
29 ஜூன், 2020 - 10:13 Report Abuse
Girija கல்யாண மன்னனை பார்த்திருப்பே கல்யாண ராமனை பார்த்திருப்பே கல்யாண ராமியை பார்த்திருக்கியா பார்த்திருக்கியா
Rate this:
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
29 ஜூன், 2020 - 05:42 Report Abuse
tamilvanan வனிதாவுக்கு இல்லம் என்று ஒன்று இருக்கிறதா? அய்யா குடும்பம் இவருக்கு வாடகை கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகே படித்தேன்.
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
29 ஜூன், 2020 - 05:22 Report Abuse
naadodi அவரவர் மன விருப்பப்படி திருமணம் செய்ய உரிமை உள்ளது..இத்தனை வெறுப்புகள் ஏனோ?
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in