Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீன தயாரிப்புகளை கொளுத்திய ஷக்தி சிதம்பரம்

26 ஜூன், 2020 - 19:22 IST
எழுத்தின் அளவு:
Director-Sakthi-Chidamparam-burned-China-products

எல்லையில் சீன ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலால் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதன்பின்னர் சீன தயாரிப்புகளை உபயோகப்படுத்தக்கூடாது என்ற கருத்து வேமாக பரவி வருகிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான், நடிகைகள் சாக்ஷி அகர்வால், சனம் ஷெட்டி ஆகியோர், டிக் டாக் மற்றும் சீன ஆப்களின் கணக்குகளை டெலிட் செய்து விட்டதாகவும், சீன பொருட்களை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சார்லி சாப்ளின், இங்கிலீஸ்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தனது அலுவலகத்தில் உள்ள சீன பொருட்களை எரித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்து, தமிழ் மண்ணைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உட்பட 20 இந்திய ராணுவ வீரர்களை கொன்ற சீன அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இதுவரை உபயோகித்த அனைத்து சீனப் பொருட்களையும் தீயிட்டு, கொளுத்தி விட்டேன். இனி வரும் காலங்களில் சீன பொருட்களை உபயோகப்படுத்த மாட்டோம் என்று சபதம் ஏற்க வேண்டும். அதுதான் உயிர்நீத்த தியாகிகளுக்கு நிஜமான நினைவஞ்சலியாக இருக்கும். இதற்கு முன்னுதராணமாக இருக்க வேண்டும் என்று என் அலுவலகத்தில் உள்ள சீன பொருட்களை, வாசலில் கொட்டி தீயிட்டு எரித்தேன். இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் இருக்கும். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நீரவ்ஷா கிண்டல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நீரவ்ஷா ... நானியுடன் மீண்டும் இணையும் சாய்பல்லவி: விலகி ஓடிய ராஷ்மிகா நானியுடன் மீண்டும் இணையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in