Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தந்தையின் தியாகத்தை உணர்த்தும், எந்தை குறும்படம்

26 ஜூன், 2020 - 16:53 IST
எழுத்தின் அளவு:
Endhai-short-film

சென்னை : கிராமப்புற குடும்பங்களில், விவசாய தந்தைகளின் கடின உழைப்பையும், தியாகத்தையும் உணர்த்தும், எந்தை என்ற குறும்படம், பலரது பாராட்டை பெற்றுள்ளது.

சென்னையின், பிரபல விளம்பர நிறுவனமான, வினிஷா விஷன் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. எந்தை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த குறும்படம், கிராமப்புற குடும்பங்களின் தந்தை, குழந்தையை வளர்ப்பது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவதில், எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

கொரோனாவுக்கு எதிரான ஒரே பாதுகாப்பும், நோய் எதிர்ப்பு சக்தி என்றே கருதப்படுகிறது. உழைப்பு, சமூக சவால்களுக்கு இடையே, குடும்பத்தில் தந்தை ஆற்றிய பங்களிப்புக்கு, இளைஞர்கள் மதிப்பளிக்க வேண்டும். இந்த ஊரடங்கு காலத்தில், தந்தையுடன் இருந்து, அவர்களுக்காக நேரம் ஒதுக்கி, அன்பை வெளிப்படுத்த, ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதையும், படம் எடுத்துரைக்கிறது.

விஜயகுமார் இயக்கிய இந்த குறும்படத்தில், கே.வி.கதிரவன், வினிஷா கதிரவன் நடித்துள்ளனர். பிரபல திரைப்பட இசையமைப்பாளர் கண்ணன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு சதீஷ், எடிட்டிங் குமார்ஆகியோர், தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். இந்த குறும்படம், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை, பலர் பாராட்டியுள்ளனர்.

இந்த குறும்படத்தை, தயாரித்து வெளியிட்ட, வினிஷா விஷன் நிர்வாக இயக்குனர் கே.வி.கதிரவன் கூறியதாவது: எந்தை குறும்படம், கிராமப்புற விவசாய தந்தையின் வாழ்க்கை, அவர்களது குழந்தைகளுடைய, கல்வி, சுகாதாரம், பிற தேவைகள் குறித்து, ஒரு எதார்த்தமான பார்வையை வழங்குகிறது. பிள்ளைகள், தாயிடம் காட்டும் அன்பையும், உணர்ச்சியையும் தந்தையிடம் காட்டுவதில்லை என, அடிகோடிட்டு காட்டுகிறது. இந்திய குழந்தைகள், தாய் வழியாக தேவையை பூர்த்தி செய்ய எண்ணுகின்றனர். தந்தையின், கடின உழைப்பு, தியாகத்தை புரிந்து கொள்வதில்லை.புரிந்து கொள்ளும் நேரத்தில், அவர்கள் குழந்தைகளுடன் இருப்பதில்லை என்ற கருத்தை, ஆழமாக பதிய வைக்கிறது, இந்த குறும்படம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போலியான எதிர்பார்ப்புகளை ஊக்குவிக்க நான் விரும்பவில்லை : ஸ்ரத்தா ஸ்ரீநாத்போலியான எதிர்பார்ப்புகளை ... சாத்தான்குளம் சம்பவம்: போலீசுக்கு ஜெயம் ரவி கண்டனம் சாத்தான்குளம் சம்பவம்: போலீசுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in