யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் | குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி! | 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம் |
கொரானோ ஊரடங்கு சினிமா நடிகர்கள், நடிகைகள் பலருக்கு நல்ல ஓய்வைக் கொடுத்திருக்கிறது. இந்த ஓய்வு காலத்தை பயனுள்ள வகையில் சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் நன்றாக ஓய்வெடுத்து வருகிறார்கள்.
இதில் நடிகை அஞ்சலி தற்போது தன்னுடைய தோற்றத்தைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார். வேறொன்றும் செய்யவில்லை, அவருடைய தலைமுடியை 'ஷார்ட்' ஆக்கியிருக்கிறார். தன் புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் அஞ்சலி, புதிய ஹேர்ஸ்டைலில் வெளிநாட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கிறார். “ஒரு பெண் அவருடைய தலைமுடியை 'கட்' செய்தால் அவருடைய வாழ்க்கையையும் மாற்றிக் கொள்ளப் போகிறார்” என பிரெஞ்ச் பேஷன் டிசைனரான கோகோ சேனல் சொன்ன வாசகத்தை தன் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
ஆக, அஞ்சலி அவருடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ளப் போகிறார் போலிருக்கிறது. விரைவில் வெளிவர உள்ள 'நிசப்தம்' படத்திலும் ஏறக்குறைய இந்தத் தோற்றத்தில்தான் உள்ளார் அஞ்சலி.