Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாண்டி இப்போது என் கணவர் இல்லை: சில்வியாவுக்கு ஆதரவாக காஜல் போட்ட பதிவு

25 ஜூன், 2020 - 17:32 IST
எழுத்தின் அளவு:
Kajal-pasupathy-supports-Sandys-wife

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி சினிமா நடிகையாக மாறியவர் காஜல் பசுபதி. கோ, கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

காஜல் பசுபதியும், நடன இயக்குனர் சாண்டியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதையடுத்து சாண்டி, சில்வியா எனும் பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தாஷா எனும் பெண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் சமூகவலைதளப்பக்கத்தில் சாண்டி தனது மனைவி சில்வியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் காஜலின் கணவரை வஞ்சகமாக திருமணம் செய்துகொண்டவர் சில்வியா என மோசமாக திட்டி கமெண்ட் செய்திருந்தனர்.

இதனால் கோபமடைந்த காஜல், தனது முன்னாள் கணவரின் மனைவி சில்வியாவுக்கு ஆதரவாக பொங்கி எழுந்துள்ளார். "கடவுளே அவர்களை தனியாக விட்டுவிடுங்கள். அது எனது தவறு தான் என நான் எத்தனை முறை தான் சொல்வது. அப்போது வெறிப்பிடித்திருந்த நான் சாண்டிக்கு கொஞ்சமும் அமைதியை கொடுக்கவில்லை. நாங்கள் 2012ம் ஆண்டே பிரிந்துவிட்டோம். அவருக்கும் (சில்வியாவுக்கும்) எங்களுடைய விவாகரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் (சாண்டி) இப்போது என் கணவரே இல்லை", என நெட்டிசன்களுக்கு பதிலளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
5வது இடத்திற்கு முன்னேறிய 'ரவுடி பேபி'5வது இடத்திற்கு முன்னேறிய 'ரவுடி ... தாராளம் காட்டி ரசிகர்களை திணறடித்த பியா பாஜ்பாய் தாராளம் காட்டி ரசிகர்களை திணறடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

LAX - Trichy,இந்தியா
01 ஜூலை, 2020 - 09:22 Report Abuse
LAX டிவி ல காலடி வெச்சுட்டாலே.. இதுமாதிரி ஆட்கள் செய்யும் அசிங்கங்கள் அதிகரிக்கவே செய்யும்.. இவங்களாகவே செய்தி பரப்புவதும்.. அதை மறுப்பதும்.. அடச்சே..
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
27 ஜூன், 2020 - 07:54 Report Abuse
M.Sam இது எல்லாம் ஒரு நியூஸ்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in