Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

5வது இடத்திற்கு முன்னேறிய 'ரவுடி பேபி'

25 ஜூன், 2020 - 17:07 IST
எழுத்தின் அளவு:
Rowdy-baby-lift-to-5th-place

இந்திய அளவில் யு-டியுபில் இடம் பெற்றுள்ள பாடல் வீடியோக்களில் 'மாரி 2' படப் பாடலான 'ரவுடி பேபி' பாடல் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

2019ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி யூ-டியூபில் வெளியான இப்பாடல் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது. தற்போது 87 கோடிக்கும் அதிகமான பார்வைகளை இந்தப் பாடல் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 7 லட்சம் பார்வைகள் இந்தப் பாடலுக்குக் கிடைத்து வருகிறது. இப்படியே போனால் இன்னும் ஐந்து மாதங்களில் இப்பாடல் 100 கோடிப் பார்வைகளைத் தொட்டுவிடும்.

ஒரு தமிழ் சினிமா பாடல் இந்திய அளவில் 5வது இடத்தைப் பிடித்துள்ளதும், ஒவ்வொரு நாளும் இன்னமும் இத்தனை பேர் பார்த்து ரசிக்கிறார்கள் என்பதும் ஆச்சரியமான தகவல்தான்.

இந்திய அளவில் 'லாங் லாச்சி' என்ற பஞ்சாபி படத்தின் 'மன்னத் நூர்' என்ற பாடல் தற்போது வரை 111 கோடி பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 'ஹனுமான் சலிசா' என்ற பக்திப் பாடல் 105 கோடி பார்வைகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
லாக்டவுனில் விளம்பரத்தில் நடித்த காஜல் அகர்வால்லாக்டவுனில் விளம்பரத்தில் நடித்த ... சாண்டி இப்போது என் கணவர் இல்லை: சில்வியாவுக்கு ஆதரவாக காஜல் போட்ட பதிவு சாண்டி இப்போது என் கணவர் இல்லை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
27 ஜூன், 2020 - 13:11 Report Abuse
maruthu pandi கலி முத்திடுத்தூ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in