மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பிரபல எடிட்டர் ஜெயச்சந்திரன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. நடிகர் விஜயகாந்த் நடித்த பல படங்களின் ஆஸ்தான எடிட்டராகவும், அவரை வைத்து படம் தயாரித்த ஒரே எடிட்டரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய, 1986ல் வெளியான "ஊமைவிழிகள்" படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக ஆபாவாணன் மூலம் அறிமுகம் ஆனவர் எடிட்டர் ஜி.ஜெயச்சந்திரன். இவருடைய தந்தை விட்டலாச்சாரியார் உட்பட பல ஜாம்பவான்களின் படத்திற்கு எடிட்டராக விளங்கியவர்.
தமிழ் சினிமாவில் சினிமாஸ்கோப் தொழில் நுட்பத்தில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் திரைப்படம் "ஊமைவிழிகள்". அதைத் தொடர்ந்து அவர் பணியாற்றிய பல படங்கள் சினிமாஸ்கோப்பில் ( அகன்ற திரை ) தயாரானது. இதனால் சினிமா வட்டாரங்களில் இவரை ஸ்கோப் எடிட்டர் என்று புகழ்ந்தனர்.
"ஊமைவிழிகள்" வெற்றியைத் தொடர்ந்து 1987 ல் வெளியான பிரம்மாண்டமான படம் "உழவன் மகன்". ஆபாவாணன், அரவிந்தராஜ், ஆர்.வி.உதயகுமார், பி.ஆர்.தேவராஜ், ஆகியோருடன் ஒரே அணியில் பணியாற்றியவர் ஜெயச்சந்திரன். ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 1988 ல் வெளியான "உரிமை கீதம்" படத்திற்கும் எடிட்டராக பணியாற்றியவர். தொடர்ந்து "பூந்தோட்டக் காவல்காரன்", "புதுப் பாடகன்" என பல படங்கள் வெளியானது.
ஆர்.கே.செல்வமணி அவர்களின் "புலன் விசாரணை", "கேப்டன் பிரபாகரன்" ஆகிய படங்கள் இவருக்கு மேலும் புகழ் தந்தது. இப்ராஹிம் ராவுத்தர், கலைப்புலி எஸ்.தானு, அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா, சிவஸ்ரீ பிக்சர்ஸ் போன்று பலரும் இவருக்கு தோள் கொடுத்தனர்.
150 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றிய இவர் " மனித தர்மம் ", "தங்கபாப்பா" உட்பட சில படங்களையும் தயாரித்தார். இன்று புகழ்பெற்ற படத்தொகுப்பாளராக விளங்கும் அசோக் மேத்தா, உதயசங்கர், ( மறைந்த ) பி.எஸ்.நாகராஜ், பீட்டர் பாபைய்யா உட்பட பலர் இவருடைய வழியில் வந்தவர்களே!
"மாநகர காவல்", "சர்கரைத் தேவன்", "பரதன்", "தாய்நாடு" அன்புச் சங்கிலி, அரவிந்தன், உட்பட பல வெற்றிகரமாக படங்களில் பணியாற்றியவர் ஜெயச்சந்திரன். இவருடைய மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பாகும்.