ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
கடந்த 40 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடன இயக்குநராக இருப்பவர் சரோஜ் கான். 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். இதில் ஒரு விருது, தமிழில் அதிதிராவ் நடித்த சிருங்காரம் என்ற படத்திற்காக கிடைத்தது.
சரோஜ்கானுக்கு சில தினங்களுக்கு முன்பு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையின் பாந்த்ராவில் இருக்கும் குருநானக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
தற்போது டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அவருக்கு ஏற்கெனவே இருக்கும் மூச்சு திணறல் பிரச்சினைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாளில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறியிருக்கிறார்கள்.
இதனால் பாலிவுட் நட்சத்திரங்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். காரணம் சரோஜ்கான் எல்லா நட்சத்திரங்களுடனும் நெருங்கி பழககூடியவர்.