Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நகுல் பாணியில் உடல் எடை குறைத்த வித்யூலேகா ராமன்

24 ஜூன், 2020 - 12:41 IST
எழுத்தின் அளவு:
Actress-vidyullekha-stunned-everyone

பாய்ஸ் படத்தில் நடித்தபோது நகுல் குண்டு பையன். அதன் பிறகு அவர் 95 கிலோவான தன் உடல் எடையை 55 கிலோவாக குறைத்து காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். நகுலின் இந்த அசாத்திய சாதனை அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது அதே பாணியில் நடிகை வித்யூலேகா ராமன் தன் உடல் எடையை 68 கிலோவாக குறைத்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் அதிக எடையில் இருந்தபோது பலரும் என்னிடம் வந்து கேட்கும் ஒரு கேள்வி, நீங்கள் எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்? என்பது தான். நான் எப்போதும் இப்படிக் குண்டாகவே தான் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டுமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

இன்று என்னை நானே பார்த்து அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனென்றால் நான் நினைத்துப் பார்க்காத ஒன்றை செய்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டுள்ளேன். உங்கள் மனதில் ஒன்று உறுதியாக இருந்தால் எதுவுமே சாத்தியம் தான் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இது எல்லோரும் சொல்லும் ஒன்று போலத்தான் இருக்கும். ஆனால் உண்மை அதுதான்.

இது எப்படி சாத்தியம். மிகவும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். வாரம் ஆறு நாட்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சரியான, சமமான உணவை சாப்பிட வேண்டும். இதற்கென ரகசிய மாத்திரை எதுவும் கிடையாது. கடின உழைப்பால் மட்டுமே அது சாத்தியம்.

வாழ்க்கையில் எதுவுமே எளிதில் கிடைத்து விடாது. ஆனால் உங்களுக்கு கிடைக்கும் பலனை பார்க்கும்போது நீங்கள் பட்ட கஷ்டம், வியர்வை, கண்ணீர் என அனைத்திற்கும் அது மறைந்து போகும். இப்போது என்னுடைய எடை 68 கிலோ. என்றார்.

நீதானே என் பொன் வசந்தம் படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா ராமன். குணசித்ர நடிகர் மோகன்ராமின் மகள். அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கி சட்டை, வேதாளம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்தக் கொண்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
நெப்போலியன் நடித்த ஆங்கில படம் வெளிநாட்டில் வெளியானதுநெப்போலியன் நடித்த ஆங்கில படம் ... போட்டோகிராபர் மம்முட்டி எடுத்த புகைப்படங்கள் போட்டோகிராபர் மம்முட்டி எடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

AXN PRABHU - Chennai ,இந்தியா
25 ஜூன், 2020 - 20:12 Report Abuse
AXN PRABHU லேகாவும் சரி அவரது தந்தை மதன் அவர்களும் சரி .. நான் மதிக்கும் நல்ல கலைஞர்கள் . நல்ல மனிதர்கள். லேகா அவர்கள் தனது உடல் நிலை ஆரோக்கியம் இவற்றில் கவனம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு மேதையின் மகள் மேதையாகத்தான் இருக்க முடியும் என்பதை நிரூபித்தவர். அவரது கட்ஸ் ( ஆண்மை கலந்த வீரம் ) எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஆரோக்யமாக நீடூழி வாழ வேண்டும் .
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
25 ஜூன், 2020 - 15:32 Report Abuse
Loganathaiyyan மிகமிக நன்று குழந்தாய் 95 லிருந்து 55 கிலோவா நானும் பத்து வருஷமாக ட்ரை பண்றேன் 65 லிருந்து 55 கிலோ செய்யவேண்டும் என்று 62 ல் வந்து நின்றது நின்றது தான். இந்த இடி குறைப்பு 40 கிலோ குறைப்பு நிரந்தரமானது தானா என்று எனக்கு சந்தேகம்
Rate this:
maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
25 ஜூன், 2020 - 09:49 Report Abuse
maruthu pandi தேவதர்ஷினியை பின்பற்றி ஒரு முழு நேர ஹாஸ்ய நடிகையாக இவருக்கு வாய்ப்பு உள்ளது . இவர் குண்டாக இருப்பதே இவர் பலம் என்பதை இவர் உணர வேண்டும் .நடிகர் கார்த்திக் ரேவதி மற்றும் ஜெனிலியா போட்ரார் வாய்ஸ் மாடுலேஷன் மூலமாக தமக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்கள் . இவர் வாய்ஸ் நன்றாக உள்ளது .
Rate this:
Girija - Chennai,இந்தியா
24 ஜூன், 2020 - 14:17 Report Abuse
Girija அடுத்த டிவோர்ஸ் கேஸ் விரைவில் வர வாய்ப்பு
Rate this:
24 ஜூன், 2020 - 20:14Report Abuse
Prasanna Krishnanunaku thane...
Rate this:
raja -  ( Posted via: Dinamalar Android App )
24 ஜூன், 2020 - 13:41 Report Abuse
raja ithuku paruthi mootai kudone laye irunthu irukalam..... kundu alagillai endru yaar sonathu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in