Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாட்டு எழுதாத கண்ணதாசன் - பிறந்தநாள் சுவாரஸ்யம்

24 ஜூன், 2020 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Kannadasan-never-write-lyrics

தமிழ் திரையுலகை இசையால் ஆட்சி செய்த எம்.எஸ்.விஸ்வநாதனும், எழுத்தால் ஆட்சி செய்த கண்ணதாசனும் ஒரே நாளில் பிறந்தது காலம் செய்த ஆச்சர்யம். இருவரும் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தார்கள். இருவரும் இணைந்து இசையால் தமிழையும், தமிழ் மக்களையும் தாலாட்டினார்கள்.

கண்ணதாசன் பற்றிய ஒரு சுவையான செய்தி. பல ஆயிரம் பாடல்கள் எழுதிய கண்ணதாசன், பல தத்துவ நூல்களை எழுதிய கண்ணதாசன் பேனா பிடித்து எழுத மாட்டார். சினிமாவுக்கு பாடல் எழுதும்போது நேராக எம்.எஸ்.விஸ்வநாதனின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு செல்வார். ஆர்மோனிய பெட்டி சகிதமாக விஸ்வநாதன் அமர்ந்திருப்பார். அருகில் படத்தின் இயக்குனர் அமர்ந்திருப்பார். கண்ணதாசன் நேராக சென்று ஆர்மோனிய பெட்டியின் முன்னால் உட்கார்ந்து கொள்வார்.

இயக்குனர் காட்சிக்காக சூழலை சொல்வார். எம்.எஸ்.விஸ்வாதன் மெட்டை இசைத்து காட்டுவார். உடனே கண்ணதாசன் பாடல் வரிகளை சொல்வார். அதனை அருகில் இருக்கும் உதவியாளர்கள் எழுதிக் கொள்வார்கள். மெட்டுக்குள் சிக்காத சில வார்த்தைகளை மாற்றுமாறு விஸ்வநாதன் சொல்வார், அதை மாற்றிச் சொல்வார் கண்ணதாசன். அதை உதவியாளர் திருத்தி எழுதிக் கொள்வார். எல்லாம் முடிந்த பிறகு உதவியாளர் எழுதிய பாடல் வரிகளை ஒரு முறை படித்து பார்த்துவிட்டு "வரட்டுமா விசு" என்றபடியே எழுந்து போய்விடுவார். அத்தனையும் 30 நிமிடத்துக்குள் முடியும்.
கண்ணதாசன் பெரும்பாலான பாடல்களை இப்படித்தான் எழுதுவார்.

சென்னையில் இல்லாத காலங்களில் அவரது உதவியாளர்கள் இயக்குனரிடம் சூழலையும், விஸ்வாதனிடம் மெட்டையும் போனிலும் கேட்டுச் சொல்வார்கள். பெட்டில் அமர்ந்து கொண்டு தலையணையை மடியில் எடுத்துக் கொண்டு அல்லது தலையை தூக்கியபடி சாய்வாக படுத்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு கண்ணதாசன் வரிகளை சொல்வார்.

அவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் அவர் சொல்லச் சொல்ல உதவியாளர்கள் எழுதியதுதான். முக்கியமான கடிதங்கள், தன் இதழுக்கான தலையங்கம் ஆகியவற்றைத்தான் கண்ணதாசன் தன் கைப்பட எழுதுவார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'கண்ணதாசனை கொண்டாடுவோம்' - தினமலர் இணையதளத்தில் சிறப்பு நேரலை நிறைவு'கண்ணதாசனை கொண்டாடுவோம்' - தினமலர் ... இன்று பிறந்த நாள் - எம்.எஸ்.விஸ்வநாதன் மெல்லிசை மன்னர் ஆனது எப்படி? இன்று பிறந்த நாள் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

jayanantham - tamilnaadu ,இந்தியா
26 ஜூன், 2020 - 01:25 Report Abuse
jayanantham கண்ணதாசன் கவிதை மழை பொழியும் கருணை மேகம் கவி அரசு. ஆனால் காசுக்காக கவிதை எழுதி, கத்திரிக்காய் போல அதை வீதியில் கூறு கட்டி விற்று, கைக்காசு செலவழித்து ஆள் வை த்து தனக்குத்தானே பேரரசு என்று சூட்டிக்கொண்ட கவிகளு ம் உண்டு.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25 ஜூன், 2020 - 10:30 Report Abuse
skv srinivasankrishnaveni இதெல்லாமும் இறைவன் தந்த வரம்தானோ இருவரும் பலபாடல்களுக்கு ள்ளே இருக்கு கடபுட தங்கிருடுங்கிரின்னு வருதே இந்தவார்த்தைகளுக்கெல்லாம் என்னடா அறுத்தம்பொருள் தெரிஞ்சவா சொல்லுங்கோலேன் ப்ளீஸ் பார்வையைக்கண்டான் விமானம்படைத்தான் என்று வரும் வரிகளையெல்லாம் ரசித்தோம் அல்லவா இப்போதுகேக்கவேபிடிக்காதநிலைமையே இருக்கே சாத்தியமா சொல்றேன் நான் கடைசீயா பார்த்தது ரோஜா என்று நியாபகம்,சிங்கப்பூரிலே இருக்கும்போது சந்தோசமா சுப்ரமணியம் என்று ஒருபடம்பார்த்தேன் ஜெயம் ரவின்னு நடிகர் தமாஷா இருந்துது பிறகு நோ மூவிஸ் பெரும்பிடிக்கலே நடிக்காலும் சகிக்கலே நடிகைகளோ எல்லாம் பாரினலேந்து இறங்கிவந்துருக்காக போல அரையும்குறையும் நிக்குறதுங்க பாடல்களோ நாராசமாயிருக்கு கிரெக்ட்டான வார்த்தைக்கிராமங்களிலே பாடும் ஒப்பாரிகளே இனிமை எனலாம் வயலென்ஸோ மஹா பயங்கரம் ஒல்லிக்குச்சியாயிருக்கும் ஹீரோ கிங்காங்கிபோல இருக்கும் குண்டுவில்லனாக்களை சுண்டுவிரலால தூக்கிவீசுறானாமா சீ சாண்டார்கள் என்றால் வீரப்ப எம்ஜிஆர் நம்பியார் படமெல்லாம் ரசிக்கலாம் சிவாஜிக்கும் சண்டைபோடவேவராது சிரிப்புதான் வரும் பிகாஸ்வில்லன்களைகிசுகிசுமூட்டுரப்போல இருக்கும் கஜினிக்கமால் எல்லாம் ஷோ பண்ணுறாப்போல இருக்கும் ரீசெண்டாப்படம் பார்ப்பதில்லே தெரியாது சோ நோ காமெண்ட்ஸ்
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் இவர் "கவியரசு" "கவிப் பேரரசுகள்" எப்படி எழுதுகிறார்களாம்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in