நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகாலம் தன் எழுத்துக்களால் கோலோச்சியவர் 'கவிதை கடவுள்' கவியரசர் கண்ணதாசன். 4,000க்கும் மேற்பட்ட கவிதைகள், 5,000 மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதியுள்ளார். நாவல், நாடகம், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரை, சுயசரிதைகள் என பல்வேறு தளங்களிலும் எழுதி குவித்தார். சேரமான் காதலி நாவலுக்காக, சாகித்ய அகாடமி விருது, குழந்தைக்காக படத்தின் வசனத்திற்காக, தேசிய விருது பெற்றார். தமிழக அரசவைக் கவிஞராக இருந்தார்.
காவியத் தாயின் மூத்த மகன் கம்பன் என்றால், இளைய மகன், காலத்தை வென்றவன், காவியம் ஆனவன் கண்ணதாசன் எனலாம். தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லாத பாரதி என்று கண்ணதாசனைப் பாராட்டுவார் கவிஞர் வாலி. அவரின் 93வது பிறந்த தினமான இன்று(ஜுன் 24) ஆஸ்திரேலியாவின் சிட்னி தமிழ் கலைக் மற்றும் பண்பாட்டு கழகம் சார்பில் 'கண்ணதாசனை கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். காணொலி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 'இசைக்கவி' ரமணன் பங்கேற்று, கண்ணதாசன் பற்றிய பல்வேறு சுவாரஸ்யங்களை வழங்கினார்.
இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி, சுமார் 1.30 மணிநேரம் தினமலர் இணையதளத்திலும், யு-டியூப் மற்றும் பேஸ்புக் தளத்திலும் நேரலையில் ஒளிப்பரப்பானது.
மேலும் இந்த ரமணின் வீடியோவையும், கண்ணதாசன் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களும், தினமலர் இணையதளத்தின் சிறப்பு பகுதியான திரைமேதைகள் பகுதியில் உள்ளது. அதன் லிங்க் இதோ.... - https://cinema.dinamalar.com/kannadasan/