பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
22 பீமேல் கோட்டயம், வைரஸ் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரான ஆசிக் அபுவும், நடிகர் பிரித்விராஜும் முதன்முறையாக ஒரு வரலாற்று படத்திற்காக இணைகின்றனர். 1921ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடந்த மலபார் புரட்சியின் பின்னணியில் உருவாக இருக்கும் இந்தப்படத்திற்கு 'வாரியம்குன்னன்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மலபார் புரட்சியில் ஆங்கிலேயரை தீவிரமாக எதிர்த்து போராடிய 'சக்கிப்பரம்பன் வாரியம்குன்னத்து. குஞ்சஹம்மது ஹாஜி' என்கிற மாவீரனின் கதாபாத்திரத்தில் தான் பிரித்விராஜ் நடிக்க உள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பை அந்த மாவீரனின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக வரும் 2021ல் துவங்க இருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் நடிப்பது பற்றி மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ள பிரித்விராஜ், “உலகத்தின் கால்பகுதியை ஆண்ட ஒரு சாம்ராஜயத்தை எதிர்த்த மாவீரன் வாரியம் குன்னன்.. அதற்குமுன் ஆங்கிலேயருக்கு எதிராக அப்படி ஒரு போர் நிகழ்ந்தது இல்லை என சொல்லும் அளவுக்கு அவர்களை எதிர்த்து போரிட்டவர்.. அவரின் வரலாறு எரிக்கப்பட்டிருந்தாலும், புதைக்கப்பட்டிருந்தாலும் இன்றும் அவரது தியாகம் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது” என கூறியுள்ளார்.