Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த உலகமே அழியும் போதும்... கார்த்திக் நரேன் தரும் நம்பிக்கை

22 ஜூன், 2020 - 17:04 IST
எழுத்தின் அளவு:
Karthik-narens-trust

மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், பிரகாஷ்ராஜ் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான படம் கன்னத்தில் முத்தமிட்டால். இலங்கை உள்நாட்டு போரை பின்னணியாக கொண்டு படத்தை உருவாக்கியிருப்பார் மணிரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் சூப்பர் ஹிட்.

அதில் குறிப்பாக, இலங்கையில் போர் உச்சத்தில் இருக்கும் போது அங்குள்ள தமிழ் மக்கள் தங்களுடைய ஊரை காலிசெய்துவிட்டு கிளம்பும் காட்சிகளுடன் எடுக்கப்பட்டிருக்கும் விடைக்கொடு எங்கள் நாடே எனும் பாடல். மனதை உலுக்கும் காட்சிகள் நிறைந்திருக்கும் அந்த பாடலின் ஒரு காட்சியில், வானில் இருந்து குண்டு மழை பொழிந்துக்கொண்டிருக்கும சூழலில் முதியவர் ஒருவர் கோயில் மணியை அடித்துக்கொண்டே இருப்பார். தெய்வம் எப்படியும் நம்மை காப்பாற்றும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.

அந்த காட்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் கார்த்திக் நரேன், " உன்னை சுற்றி இருக்கும் இந்த உலகமே அழியும் போதும், நீ கொண்ட நம்பிக்கையின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைப்பதே உண்மையான நம்பிக்கையாகும்", என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பிரச்சினையால் சென்னை மக்கள் அல்லாடி வருகின்றனர். இதனால் பலர் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். ஆனால் இப்படியான சூழ்நிலையிலும் இன்னமும் பல சென்னைவாசிகள் நம்பிக்கையுடன் நம் ஊர் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு, பழைய படி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையுடன் இங்கேயே இருந்து வருகின்றனர். அவர்களின் மனநிலையைத்தான் கார்த்திக் நரேன் இப்படி பிரதிபலித்துள்ளார் போலும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஏட்டிக்குப் போட்டி - டிரெண்டிங்கில் அஜித் ரசிகர்கள்ஏட்டிக்குப் போட்டி - டிரெண்டிங்கில் ... ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக போராடுவேன் ; அம்ருதா பதிலடி ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in