ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
பெண்குயின் படத்தை அமேசான் வெளியீட்டிற்குப் பிறகு அப்படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ் கூட கண்டுகொள்ளவில்லை போலிருக்கிறது. அவர் தன்னுடைய பழைய திறமைகள் தன்னிடம் அப்படியே இருக்கிறதா என்பதை சோதித்துக் கொள்ளப் போய்விட்டார்.
கீர்த்தி சுரேஷ் வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டவர் போலும். அதனால், இந்த கொரானோ ஊரடங்கில் மீண்டும் தன்னிடம் அந்தத் திறமை அப்படியே இருக்கிறதா என வாசித்துப் பார்த்துள்ளார்.
வயலினுடன் ஒரு போட்டோவைப் பதிவிட்டு, “இந்த சமயத்தில் வயலின் வாசிக்கும் என்னுடைய பழைய திறமையை தூசி தட்டிப் பார்க்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அசுரன் பட நாயகியான மஞ்சுவாரியர் கூட இந்த கொரானோ ஊரடங்கில் அவருடைய வீணை வாசிக்கும் திறமையைப் பற்றி சில வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.
இசை சம்பந்தமான ஒரு படத்தில் கீர்த்தியை கதாநாயகியாக வைத்து ஒரு கதையை எழுதுங்கள் இயக்குனர்களே.
இதற்கிடையே மற்றொரு வீடியோவில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 'மாஸ்டர்' படத்தில் இடம் பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலை வயலின் வாசித்து பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார் கீர்த்தி.
'Life is very short Nanba, always be happy!'
Happy Birthday @actorvijay Sir! 😊❤️
A small tribute to you on your birthday sir
❤️#HappyBirthdayThalapathyVijay #HBDTHALAPATHYVijay #Master pic.twitter.com/Xnxgidjuhr
— Keerthy Suresh (@KeerthyOfficial) June 22, 2020