Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐதராபாத் படுகொலை சம்பவத்தை படமாக்கும் ராம்கோபால் வர்மா

22 ஜூன், 2020 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Ramgopal-Varma-to-make-Hyderabad-murder-incident

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் மருத்துவமனை முன் நடந்த ஆணவக்கொலை சம்பவம் அந்த மாநிலத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து ராம்கோபால் வர்மா மர்டர் இன் லவ் என்ற படத்தை இயக்குகிறார் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று தந்தையர் தினத்தில் வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது:

இது இதயத்தைப் பிழியும் ஒரு கதையாக இருக்கப் போகிறது. இது அம்ருதா மற்றும் மாருதி ராவ் கதையை அடிப்படையாகக் கொண்டது. தந்தை தன் மகளை அதிகமாக நேசிப்பதன் அபாயங்களைப் பற்றியது. தந்தையர் தினத்தன்று படத்தின் போஸ்டரை வெளியிடுகிறோம். என்கிறார்.

அந்த நிஜசம்பவம் வருமாறு: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் பிரனய் குமார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும் காதலித்தார்கள். பிரனய் குமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதலுக்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். எனினும் மாருதி ராவின் எதிர்ப்பையும் மீறி இருவரும் ஹைதராபாத் சென்று திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாருதி ராவ் கூலிப்படையை வைத்து மருமகனை தீர்த்து கட்டினார். கர்ப்பிணியான அம்ருதாவும் அவள் கணவரும், மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வெளியே வந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கண் இமைக்கும் நேரத்தில் பிரனய் குமாரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அம்ருதாவின் தந்தை மாருதி ராவும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
6வது நினைவு நாள்: சத்தமின்றி சாதனை படைத்த ராம நாராயணன்6வது நினைவு நாள்: சத்தமின்றி சாதனை ... புதிய சாதனை படைக்குமா #HBDTHALPATHYVijay புதிய சாதனை படைக்குமா #HBDTHALPATHYVijay

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in