Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்னேஷ் சிவன் பதிவிட்ட கொரானோ காதல்

22 ஜூன், 2020 - 11:27 IST
எழுத்தின் அளவு:
Vignesh-shivan---Nayantharas-Corona-Love

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாகவே வசிக்கிறார்கள். சிலர் அவர்களுக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சிலர் இன்னும் நடக்கவில்லை என்றும் சொல்லி வருகிறார்கள். நயன்தாரா திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளிவந்தால் அவருடைய மார்க்கெட் நிலவரம் பாதிக்கப்படும், அதனாலேயே அவர் அதை வெளியில் சொல்லாமல் மறைக்கிறார் என்று சொல்பவர்களும் உண்டு.

நேற்று நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் கொரோனா என செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் தங்களுக்கு கொரோனா இல்லை என விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் கொரானோ காதல் என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஏதோ ஒரு மொபைல் ஆப்பின் மூலம் தங்கள் இருவரையும் சிறுமி, சிறுவனாக மாற்றிக் கொண்டு ஜாலியாக நடனமாடும் வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “அனைத்து ஊடகங்கள், சோஷியல் மீடியா நண்பர்கள் ஆகியோரது கொரோனா பற்றிய கற்பனையை, செய்திகளை நாங்கள் இப்படித்தான் பார்க்கிறோம். எங்கள் நலம் விரும்பிகளுக்கு, நாங்கள் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்கிறோம். உங்களைப் போன்ற ஜோக்கர்களுக்கும், உங்களின் ஜோக்குகளைப் பார்ப்பதற்கும், கடவுள் எங்களுக்கு தேவையான தைரியம், மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறார்,” என்று தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் கொரோனா என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து சென்னையில் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும் பரபரப்பு ஏற்பட்டதாம்.




View this post on Instagram







And .., thats how we see the news about us, the corona and the imagination of all the press & social media sweethearts 🥳 Anyways! To our well-wishers 😇 We are happy 😊 healthy and God has blessed us with enough strength & happiness to see all you jokers and your jokes ! 😇😇😇 God bless 😇😇😇🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on





மற்றொரு பதிவில், முன்பு வெளிநாடுகளில் சுற்றுபயணம் செய்தபோது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில் அவர் நயன்தாராவின் நெற்றியில் முத்தமிட்டுகிறார். இருவரும் காதல் மழையில் நனைவது போன்று அந்த போட்டோ அமைந்துள்ளது.



Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
டுவிட்டரை விட்டு விலகிய 'லிங்கா' நாயகி சோனாக்ஷிடுவிட்டரை விட்டு விலகிய 'லிங்கா' ... டிரெண்டிங் - விஜய்யை முந்திய கவின் டிரெண்டிங் - விஜய்யை முந்திய கவின்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
23 ஜூன், 2020 - 05:02 Report Abuse
Mani . V ".....…நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஏதோஒரு மொபைல் ஆப்பின் மூலம் தங்கள் இருவரையும் சிறுமி, சிறுவனாக மாற்றிக்கொண்டு ஜாலியாக நடனமாடும்.........…" ஆடு தம்பி ஆடு இன்னும் சில மாதம் தானே. அப்புறம் சிம்பு, பிரபுதேவா ,வரிசையில் நீனும் நின்று அழுது கொண்டு இருக்க வேண்டியதுதான் - எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்திவிட்டு. திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணுடன் வாழ்வதை கிராமங்களில் வேறு மாதிரி சொல்வார்கள்.
Rate this:
saravan - bangaloru,இந்தியா
22 ஜூன், 2020 - 19:24 Report Abuse
saravan அதெல்லாம் ஒன்றும் இல்லை...நயன்தாரா வேஷம் களைந்து பல நாட்கள் ஆகிவிட்டது...
Rate this:
KONGUSINGAM - COIMBATORE,இந்தியா
22 ஜூன், 2020 - 16:34 Report Abuse
KONGUSINGAM TAMIL
Rate this:
KONGUSINGAM - COIMBATORE,இந்தியா
22 ஜூன், 2020 - 16:33 Report Abuse
KONGUSINGAM தமிழ் நாட்டோட சொப்பன சுந்தரி
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
22 ஜூன், 2020 - 16:21 Report Abuse
Endrum Indian இவர்களை பற்றி தினம் ஒரு செய்தி விளம்பரம் வரவேண்டும் இல்லையென்றால் அவர்கள் மார்க்கெட் எகிறாது நிறைய பணம் பண்ண முடியாது இதற்க்காகக் இவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். இவனுங்க என்ன ஆனா என்ன மக்கள் வாழ்க்கைத்தரம் உயரப்போகின்றதா தாழ்ந்து போகப் போகின்றதா? இவர்கள் செய்தய்யை நீங்கள் கொஞ்ச நாள் வெளியிடவில்லையென்றால் வெறும் துக்க செய்தி தற்கொலை என்று தான் வெளியிடவேண்டும் அவ்வளவு கேவலமான ...சினிமா தொழிலாளிகள் இவர்கள்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in