Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தென்னிந்திய இசைக் கலைஞர்களுக்கு எஸ்பிபி உதவி

21 ஜூன், 2020 - 13:17 IST
எழுத்தின் அளவு:
SPB-helps-to-south-indian-music-artists

கொரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக பல்வேறு துறைகள் முடக்கம் அடைந்துள்ளன. சினிமாத் துறையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் உள்ளிட்ட எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால், பல்வேறு தொழிலாளர்கள், கலைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். தொழிலாளர்களை உள்ளடக்கிய பெப்ஸி அமைப்பு மூலம் பலருக்கும் உதவிகள் போய்க் கொண்டிருக்கின்றன.

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா ஊரடங்கு ஆரம்பமான நாட்களில் இருந்தே கொரோனா நிவாரண நிதியை தன்னுடைய இசைப் பங்களிப்பு மூலம் வசூல் செய்ய ஆரம்பித்தார். முதலில் தினமும், பின்னர் வாரத்திற்கு சில நாட்கள் என பேஸ்புக்கில் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க பல்வேறு மொழிப் பாடல்களைப் பாடினார். தன்னிடம் விருப்பப் பாடலைக் கேட்பவர்கள் கொரோனா நிதியை வழங்கிப் பாடலைக் கேட்க வேண்டும் என எஸ்பிபி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி பலரும் நன்கொடை கொடுத்து தங்களின் விருப்பப் பாடல்களைக் கேட்டனர்.

'லிசனர்ஸ் சாய்ஸ்' என்று பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சி மூலம் 17 லட்சத்திற்கும் கூடுதலான தொகை, மேலும் சில இசைக் கலைஞர்கள் அப்படி வசூலித்த 3 லட்ச ரூபாய் சேர்த்து 20 லட்ச ரூபாயை நன்கொடையாக திரட்டியதாக எஸ்பிபி இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிவித்துள்ளார்.

அந்தத் தொகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாயும், மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள இசைக் கலைஞர்களுக்கு 12 லட்ச ரூபாய் வரை நிவாரணத் தொகையாகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காக 80 ஆயிரம் ரூபாயும் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கொரோனா நிவாரண நிதியை பலரும் பல்வேறு விதத்தில் தங்கள் ரசிகர்களிடமிருந்து பெற்றனர். ஆனால், தன்னுடைய இசை பங்களிப்பு மூலம் எஸ்பிபி செய்ததில் அவருடைய ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பெற்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எங்களுக்கு கொரோனாவா - நயன்தாரா, விக்னேஷ் சிவன் மறுப்புஎங்களுக்கு கொரோனாவா - நயன்தாரா, ... சுஷாந்த் சிங் மரணம் - ஆலியாவால் ராஜமவுலிக்கு புதிய சிக்கல் சுஷாந்த் சிங் மரணம் - ஆலியாவால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in