வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
தமிழ் சினிமாவில் 80களில் நாயகியாக அறிமுகமாகி சில படங்களில் நடித்த மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் இதுவரை நடித்த படங்களில் 'ரஜினி முருகன், சர்க்கார்' ஆகிய இரண்டு படங்கள் தான் பெரிய அளவில் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. மற்ற படங்களில் அவருடைய நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநடி' படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் இந்திய அளவில் புகழ் பெற அந்தப் படம் காரணமாக அமைந்தது. மேலும் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். அந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கென ஒரு இமேஜ் சினிமா உலகில் வந்தது. ஆனால், அதைக் காப்பாற்றிக் கொள்ளும் விதத்தில் அவருடைய படங்கள் அமையவில்லையோ என்ற சந்தேகத்தை 'பெண்குயின்' படம் உறுதி செய்துள்ளது.
நேற்று படத்தைப் பார்த்த பலரும் 'பெண்குயின்' மாதிரியான படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கக் கூடாது என்றே கருத்து தெரிவித்துள்ளார்கள். படத்தில் அவருடைய நடிப்பு தான் ஓரளவிற்குப் படத்தைக் காப்பாற்றியுள்ளது. ஆனால், கீர்த்திக்கு ஏற்ற படமாக அப்படம் இல்லை என்று தான் சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
தற்போது தமிழில் 'அண்ணாத்த' படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.