18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் | 'யாக்கை திரி'க்காக கொல்கத்தா வந்துசேர்ந்த பரத் |
'எம்எஸ் தோனி' படத்தில் நாயகனாக நடித்து கிரிக்கெட் ரசிகர்களையும், சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் சுஷாந்தி சிங் ராஜ்புத். கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மறைவின் அதிர்ச்சி தென்னிந்தியாவிலும் இருந்தது. பலரும் அவரது மறைவு குறித்து தங்களது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்தனர்.
பாலிவுட்டில் உள்ள சினிமா வாரிசு அரசியல் காரணமாக பட வாய்ப்புகளை இழந்த சுஷாந்த் மன உளைச்சலுக்கு ஆளானார். அதன் காரணமாகத்தான் அவற் தற்கொலை செய்து கொண்டார் என செய்திகள் பரவின. ஒரு டிவி நிகழ்ச்சியில் யார் சுஷாந்த் என்று கேட்ட நடிகை ஆலியா பட் மீது ரசிகர்கள் தங்களது வெறுப்புகளை வெளியிட்டனர்.
அதன் எதிரொலியாக இன்ஸ்டாகிராமில் ஆலியா பட்டைப் பின் தொடர்ந்த 13 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை 'அன் பாலோ' செய்தனர். கடந்த ஐந்து நாட்களில் இது நடந்துள்ளது. ஒவ்வொரு நாளும் அவரை அன் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
ராஜமௌலி இயக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நாயகியாக நடிக்க ஆலியா பட் ஒப்பந்தமாகி உள்ளார். ஆலியா மீதுள்ள ரசிகர்களின் வெறுப்பு பற்றி ராஜமௌலி யோசிக்க ஆரம்பித்தால் ஆலியாவைப் படத்திலிருந்தும் நீக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இருப்பினும் 'பாகுபலி' படத்தை ஹிந்தியில் வெளியிட்ட கரண் ஜோஹர் தான் ஆலியா பட்டை 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடிக்க சிபாரிசு செய்தார். எனவே, ராஜமௌலி அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்றும் சொல்கிறார்கள்.
கரண் ஜோஹர், சோனம் கபூர், சல்மான் கான் ஆகியோர் மீதும் சினிமா வாரிசு அரசியல் செய்பவர்கள் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருவதால் அவர்களும் தங்களது பாலோயர்களை இழந்துள்ளார்கள்.
இதனிடையே, சுஷாந்த் மறைவு குறித்தும், பாலிவுட்டில் இருக்கும் 'நெபோட்டிசம்' குறித்தும் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்த கங்கணா ரணவத் பாலோயர்கள் எண்ணிக்கை கடந்த ஐந்து நாட்களில் இரு மடங்கிற்கும் அதிகமாகி 20 லட்சத்திலிருந்து 50 லட்சத்தை நெருங்கி வருகிறது.