Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

என் வாழ்க்கையை மீட்டு கொடுத்தீர்களே சாச்சி : திலீப் உருக்கம்

20 ஜூன், 2020 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Dileep-condolence-to-director-Sachy

பிரபல மலையாள கதாசிரியரும் இயக்குனருமான சாச்சியின் மறைவு ரசிகர்களை மட்டுமல்ல, திரையுலக பிரபலங்களையும் உலுக்கியுள்ளது.. நடிகர் திலீப், வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராம்லீலா மூலம் என் வாழ்க்கையை மீட்டு கொடுத்தவர் நீங்கள்.. எனது சகோதரரை போன்ற நீங்கள் மீளா விடைபெறும் இந்த நேரத்தில் என் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.” என்று கூறியுள்ளார்.

கடந்த 2017ல் சாச்சி கதை எழுதி, திலீப் நடித்த 'ராம்லீலா' படம் வெளியானது.. திலீப் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான அருண்கோபி என்பவர் இயக்கியிருந்தார். இந்தப்படம் வெளியான சமயத்தில் நடிகர் திலீப், நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறைவாசத்தில் இருந்தார்.. ஒரு பெண் தொடர்பான வழக்கில் சிக்கியதால் திலீப்பின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என சொல்லப்பட்டு வந்தது.

அப்படிப்பட்ட சூழலில் வெளியான ராம்லீலா இந்த வாதங்களை எல்லாம் தகர்த்தெறிந்து வசூல் சாதனை படைத்தது.. திலீப்பின் முதல் நூறு கோடி வசூல் படமாகவும் அமைந்தது.. அந்த அளவுக்கு அரசியல் பின்னணியில் புதிய பாணியில் இந்தப்படத்தின் கதையை உருவாக்கி இருந்தார் கதாசிரியர் சாச்சி. சொல்லப்போனால் நடிகர் திலீப்புக்கு இந்தப்படம் ஒரு அக்னி பரீட்சையாக இருந்தது என்றுகூட சொல்லலாம். அதனால் தான் “என் வாழக்கையை மீட்டுக்கொடுத்தவர் சாச்சி” என திலீப் உருக்கமாக கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திரையுல பாகுபாடு பற்றி பேசிய இளம் நடிகருக்கு நோட்டீஸ்திரையுல பாகுபாடு பற்றி பேசிய இளம் ... நடிகர் சீனிவாசன் மீது பெண்கள் ஆணையத்தில் புகார் நடிகர் சீனிவாசன் மீது பெண்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in