Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3வது திருமணம் செய்வது ஏன்? வனிதா விளக்கம்

20 ஜூன், 2020 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Vanitha-replied-why-she-marrying-3rd-time

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. விஜய் ஜோடியாக சந்திரலேகா படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நடித்தார். நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாயானா நிலையில் அவரை விவாகரத்து செய்து விட்டு, ஆந்திர தொழில் அதிபர் ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார். அவருக்கு ஒரு மகளை பெற்றார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு நடன இயக்குனர் ராபர்ட்டுடன் நெருக்கம் காட்டி வந்தார். பின்பு அவரையும் பிரிந்தார். இந்த நிலையில் கிராபிக்ஸ் டிசைனர் பீட்டர் பால் என்பவவரை 3வதாக திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இவர்கள் திருமணம் வருகிற 27ந் தேதி வனிதாவின் வீட்டில் நடக்கிறது.

இந்த நிலையில் தான் 3வது திருமணம் செய்து கொள்வத ஏன் என்பதை விளக்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் வாழ்க்கையில் கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. நான் 40 வயதை நெருங்குகிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு ஏற்ற துணையை தேர்வு செய்வதில் ஒரு கனவு இருக்கும். எனது கனவு நனவாகி இருக்கிறது. பீட்டர் பால் எனது வாழ்க்கையில் நுழைந்துள்ளார். அவருடன் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறேன். ஒரு நண்பராக வந்து எனது வாழ்க்கையின் பிரச்சினைகளை சரிபடுத்தினார். என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்ததும் சந்தோஷப்பட்டேன்.

எங்கள் திருமணத்துக்கு எனது குழந்தைகளும் சம்மதம் சொன்னதும் கண்களில் கண்ணீர் வந்தது. இது எனது வாழ்க்கையின் சிறந்த தருணம். எனது குடும்பம் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் இருந்து எனக்கு எந்தவிதமான ஆதரவோ உதவியோ கிடைக்கவில்லை. என் மகிழ்ச்சிக்காகவும் குழந்தைகளுக்காகவும் வாழ முடிவு செய்துள்ளேன்.

என் இதயத்தை திருடிய பீட்டர் பால் ஒரு இயக்குனர். அன்பானவர். நேர்மையானவர், அவரது படைப்பு விரைவில் திரையில் வரும். அரசின் விதிமுறையை பின்பற்றி எங்கள் திருமணம் நடக்கும்.

Advertisement
கருத்துகள் (29) கருத்தைப் பதிவு செய்ய
பொன்விழா படங்கள்: பத்தாம் பசலி - தனது படத்தை ரீமேக் செய்த கே.பாலச்சந்தர்பொன்விழா படங்கள்: பத்தாம் பசலி - தனது ... தற்கொலையா.. கொலையா? திரைப்படமாகிறது சுஷாந்த் மரணம் தற்கொலையா.. கொலையா? திரைப்படமாகிறது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (29)

நிலா - மதுரை,இந்தியா
27 ஜூன், 2020 - 10:22 Report Abuse
நிலா அவள் விருப்பம் பாவம் வாழட்டுமே
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
23 ஜூன், 2020 - 08:13 Report Abuse
M.Sam எல்லாம் வசதியும் வாய்ப்பும் தான் காரணம்
Rate this:
V.B.RAM - bangalore,இந்தியா
23 ஜூன், 2020 - 05:17 Report Abuse
V.B.RAM அது சரி எப்போது மதம் மாறப்போகிறாய். பின்பு பீட்டர் பாலுடன் சேர்த்து மற்றவரை மாற்றப்போகிறாய்.
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
22 ஜூன், 2020 - 12:24 Report Abuse
Tamilnesan விரைவில் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.
Rate this:
(Original) Nakkeran - Coimbatore,இந்தியா
22 ஜூன், 2020 - 10:02 Report Abuse
(Original) Nakkeran நீயெல்லாம் இந்தியாவில் பிறக்கவேண்டிய பெண்ணே கிடையாது.
Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in